மறவாது எழுதுவேன்! மரபில் கவிதை
–என்
மனமென்னும் தோட்டத்தில், போட்டீர் விதையே!
இறவாது வாழ்வது அதுதான் என்றே
–பலர்
இயம்பிட,
உள்ளத்தில் ஏற்றேன் இன்றே!
தரமாக தந்திட முயல்வேன் நானே
–அன்னை
தமிழ்தானே நமக்கெல்லாம் திகட்டாத் தேனே!
வரமாக வழங்கிடும் மறுமொழி தம்மை– நீரும்
வழங்கிட,
வளர்ந்திட, வணங்குவேன் உம்மை!
உள்ளத்தில் எழுகின்ற எண்ண தாமே–திரண்டு
உருவாக,
கருவாகி, கவிதை ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட நீர்போல் தேங்கி–பின்னர்
பாய்கின்ற
நிலைபோல நெஞ்சில் தாங்கி,
கொள்ளத்தான் எழுதிட
முயல்வேன் !மேலும் –அதில்
குறைகண்டே
சொன்னாலும் திருத்தி, நாளும்!
எள்ளத்தான் சொன்னாலும் வருந்த மாட்டேன்
– மேலும்
எவர்மனமும் புண்பட கவிதைத் தீட்டேன்!
தனிமைமிகு இருள்தன்னில் தவிக்க
லானேன் –முதுமை
தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்!
இனிமைமிகு உறவுகளே நீங்கள் வந்தீர்
– நானும்
இளமைபெற மறுமொழிகள் வாரித் தந்தீர்!
பனிவிலக வெம்மைதரும் கதிரோன் போன்றே
–எனைப்
பற்றிநின்ற துயர்படலம் விலகித் தோன்ற!
நனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர்
– வாழ்
நாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்!
நன்றிப்பா அருமை ஐயா
ReplyDeleteதாங்கள் இன்னும் பல கவிமழை பொழிவீர்கள். வாழ்க நலம்
அருமை ஐயா. தொடரட்டும் கவிதை மழை.
ReplyDeleteமிக அருமையாக இருக்கிறது. நேற்று முழுவதும் உங்கள் புளொக் திறக்கவில்லையே.. ஏதோ எரர் காட்டியது..
ReplyDeleteவணக்கம் ஐயா!
ReplyDeleteமுயற்சியால் முன்வரலாம் மூப்புதடை யில்லை!
அயற்சிபோகும் பாபுனைவீ ராம்!
உங்களால் முடியும் ஐயா! அருமையான பா படைத்தீர்கள்.
இன்னும் தொடருங்கள்!..
அருமை ஐயா
ReplyDeleteஅருமை
தொடர்ந்து எழுதுங்கள்
தங்கள் பணி தொடருங்கள்
ReplyDeleteநாமும் தொடருவோம்
தொடருங்கள்.
ReplyDelete