தமிழ்மணத்திற்குத் தாழ்மையான வேண்டுகோள்
தகவல்
இல்லை என்று நாள்தோறும் தகவல்
தர காரணம்
என்ன? ஏதேனும்….?
பொருளாதார சிக்கலா! தொழில் நூட்பக் கோளாறா
இவ்வாறு
தடைப்பட்டு
இருப்பதற்கு என்று!? புரியவில்லை! உரியவிளக்க மளித்தால்
அதற்கேற்ப
நாங்கள் செயல் படுவோம்
உன் வரவு இல்லாமல் வலைப்பதிவுலகமே இருண்டு
கிடக்கிறது
! யார் எழுதுகிறார்கள். என்ன எழுதுகிறார் என உன் பட்டியலைப்
பார்த்து
அறிந்து நாள்தோறும் பழகி விட்ட நாங்கள் இன்று
, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலவும்
திசை அறியாத மாலுமி போலவும்
திகைத்து
நிற்கிறோம்
இந்நிலை நீடித்தால் வலைப்ப பதிவு உலகமே காணாமல்
போய்விடும்
இதுவரை நீ ஆற்றிக் கொண்டிருக்கின்ற சேவைக்கு
ஈடோ இணையோ என்பது முற்றிலும் உண்மை!
அது தொடர இறைவனை வேண்டுவதோடு .நீயும்
விரைந்து
விளக்க மளிக்க வேண்டுகிறோம்
புலவர் சா இராமாநுசம்
ஐயா இப்பொழுது டேஷ்போர்டு வழியாகவே எல்லாரும் வருகின்றார்கள்
ReplyDeleteஎப்படி எனக்கு புரியவில்லை விளக்கமாக எழுதுங்கை கில்லர்!
Deleteதமிழ் மணம் கடந்த மாதம்வரை பதிவுகளை தாணியங்கியாக எடுத்து வந்தது யாரும் யாருக்கும் ஓப்டு போடமுடியாது
Deleteஅதுவும் கடந்த பத்து தினங்களாக நின்று விட்டது தமிழ் மணம் உள்ளே போனால் வெற்றிடமாக உள்ளது.
வேலை நடைபெறுவதாக அறிவிப்பு பலகை இருக்கிறது.
அதனால் தற்போது அவரவர் டேஷ்போர்டுக்கு வரும் பதிவுகளையே படிக்க வழி உள்ளது இதனால் வருகையாளர்கள் எண்ணிக்கை எல்லோருக்குமே குறைந்து விட்டது.
தமிழ் மணம் வந்தால் வரவில் வைப்போம்.
வராவிட்டால் மோடி அரசை நம்புவது போலவே இதையும் நம்புவோம்.
சும்மாவே பதிவர்கள் முகநூல் பக்கம் போய் விட்டார்கள்.
இனி ???
புலவர் ஐயா, நீங்கள் ஒவ்வொரு புளொக்கிலும் சைட்டில் பாருங்கோ.. fallow என இருக்கும் அதில் கிளிக் பண்ணி ஃபலோவராக சேர்ந்திடுங்கோ.
Deleteபின்பு உங்கள் புளொக்கில் புளொக்கர் ஓபின் பண்ணி.. நியூ போஸ்ட் போட ஓபின் பண்ணும் பகுதி.. அதில் இடது பக்கம் கீழ் மூலையில் பாருங்கோ reading list என இருக்கும்.. அதைக் கிளிக் பண்ணினால்.. புதுப் போஸ்ட் எல்லாம் வந்திருக்கும்...
புலவர் அய்யா அவர்களுக்கு, நீங்கள் சொல்வது சரிதான். தமிழ்மணம் இல்லாத வலையுலகு என்னவோ போல் இருக்கிறது. இன்று அதாவது இந்த நொடியில் தமிழ்மணம் காட்சி தருகிறது; ஆனால் இன்னும் பழைய நிலைமைக்கு திரும்பவில்லை.
ReplyDeleteமேலே நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி சொன்னது போல, எனது Blogger - Dashboard வழியேதான் மற்றவர் பதிவுகளை படிக்க முடிகிறது; அதிலும் எல்லோருடைய பதிவுகளும் வருவதில்லை. எனவே எனது வலைத்தளத்தை இப்போது தமிழ்திரட்டி, பதிவர் திரட்டி ஆகியவற்றில் இணைத்துள்ளேன். மேலும் ஏற்கனவே Indiblogger - Tamil இலும் இணைந்துள்ளேன்.
நான் ஜி பிளஸ்சில் இருப்பதால், அங்கு கொடுக்கப்படும் லிங்க்ஸ் வழியாகவும், எங்கள் தள ஸைட் பாரில் இணைத்திருக்கும் தளங்கள் லிங்க் வழியாகவும் நண்பர்கள் தளங்களுக்குச் செல்கிறேன். பரிவை குமார், துளசிதரன் தில்லையகத்து போன்ற தளங்களிலும் நண்பர்களின் தள இணைப்புகள் கிடைக்கும்.
ReplyDeleteமாற்று வழிகளைப் பார்ப்போம் ஐயா
ReplyDeleteதமிழ் மணம் விரைவில் சரியாகும் என்று நம்புவோம் ஐயா...
ReplyDeleteஏதேனும் மாற்று வழிகள் இருந்தால் தெரிந்தவர்கள் விபரமாகச் சொல்லட்டும்... காத்திருப்போம்
தமிழ்மணம் மீண்டும் வந்துவிட்டது.
ReplyDelete