முயன்றாலே
முடியாதன ஏதுமில்லை-நம்மை
முன்னேற்ற முயல்வதிலே தீதுமில்லை
உயர்ந்தோங்கி
வளர்கின்ற மரமேபோன்றே-எவரும்
உள்ளத்தில் பெறுமுறுதி வரமாத்தோன்ற
வியந்தேதான்
காண்போரும் எண்ணவேண்டும்-ஆய்ந்து
வினையாற்றி வழிகாணில் வெற்றியாண்டும்
பயனாற்றும்
வாழும்வகை நாளும் காட்டும்-நன்கு
பண்பட்ட மனிதரென புகழும் சூட்டும்
புலவர் சா இராமாநுசம்
முயற்சி திருவினை ஆக்கும்.
ReplyDeleteநன்றி புலவர் ஐயா.
உண்மைதான் ஐயா. முயற்சி என்றும் நம்மை மேம்படுத்தும்.
ReplyDeleteஉண்மை ஐயா அருமையான கவிதை
ReplyDeleteத.ம.பிறகு
அருமை
ReplyDeleteமுயன்றால் முடியாதது இல்லைத்தான்.. இருப்பினும் சிலது கிடைக்கவே கிடைக்காது என விதியில் இருப்பின்.. எவ்வளவு முயன்றுக் கிடைக்காது!..
ReplyDeleteமுயற்சி மெய் வருத்த...
ReplyDeleteகவிதையை ரசித்தேன் புலவர் ஐயா. முயற்சி திருவினையாக்கும்.
ReplyDeleteவரமாத்தோன்ற - வரமாய்த்தோன்ற என்று வரவேண்டாமா?
மனிதரென புகழும் - இங்கு மனிதரெனப் புகழும் என்று வரலாமா?
படித்தேன், ரசித்தேன்.
ReplyDeleteசிலகவிதைகள் எழுதத்தோன்றும்பின்புலங்கள் பற்றியும் எழுதலாமே
ReplyDelete