Tuesday, January 2, 2018

முகநூல் பதிவுகள்!


சொல்லுதல் யாருக்கும் எளிது
ஆனால் சொல்லியவாறு செய்தல் மிகவும் அரிது

சட்ட மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற இரசினி
நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும் அப்போது முடிவெடுக்கப் படும் என்கிறாரே! காரணம் என்ன!!?
விளக்குவாரா!!

எந்த ஒரு செயலாய் இருந்தாலும் நன்கு ஆய்ந்து அதன் பின்னே தொடங்குவது நன்று! தொடங்கிய பின்
அதனை ஆய்வு செய்தால்அதனால் இழுக்கு தான் ஏற்படும் !இது யாருக்காவும் எழுதப் பட்ட தல்ல! வள்ளுவர் வாக்கு!

எந்த செயலாய் இருந்தாலும் அதற்கேற்ற ,காலமும் இடமும்
அறிந்து செயல் பட்டால் அஞ்சாமை தவிர வேறு துணை எதுவும் தேவையில்லை வெற்றி உறுதி!

இடைத் தேர்தலில் பணநாயகம்
வெற்றி பெற்றது என்றாலும் கூட ,ஓட்டு வித்தியாசம் அதிகம் என்பதை ஆய்ந்தால் அது தினகரனுக்காப் போடப்பட்டது என்பதைவிட மக்கள் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர் பார்த்து போடப்பட்டுள்ளது என்றே நான்
கருதுகிறேன்!

உறவுகளே
2.G வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது! அதைப்பற்றி கருத்து எதுவும் இங்கே குறிப்பிட நான் வரவில்லை ஆனால் இன்று கோடிக் கணக்கான மக்கள் , ஏன் இன்னும் சொல்லப்போனால் நாட்டில் செல்போன் இல்லாத
மனிதரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர காரனமானவர் அ .இராச என்பது குறிப்பிடத் தக்கது

புலவர்  சா  இராமாநுசம்

8 comments :

  1. கட்சி நிறுவினாலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டாராமே ஆன்மீகமே தன் கட்சியின் கொள்கை என்பதுதான்
    புரியவில்லை

    ReplyDelete
  2. நல்ல நடிகர் ரஜினி. அரசியல் நிலைப்பாட்டால் பிடிக்காம போயிட்டுது

    ReplyDelete
  3. "இரசினி" !! :))

    நல்ல தொகுப்பு. உங்கள் கருத்துகளை அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
  4. "செல்போன் இல்லாத மனிதரே இல்லை"
    உண்மை ஐயா

    ReplyDelete
  5. முகநூல் இற்றைகள்... சில அங்கேயும் படித்தவை.

    இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...