தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
மேதினி உணர்ந்திட இங்கே விண்டோம்
உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
கைகள் முடங்கிடின் எதுவு மின்றே
மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?
புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
இயலாது! இயலாது !கண்டோ மன்றே-அந்த
ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
பயிலாதப் பெரும்பான்மை மக்க ளய்யா-உடன்
பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!
அன்பின் வழிவந்த வலையுலக நெஞ்சங்களே!
உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளாம்
நம், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தைமுதல்நாளெ தமிழ்ப்புத்தாண்டு என்பதற்கு ஏதாவது இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன் அய்யா!
ReplyDeleteகாடு விளைஞ்சென்ன மச்சான் - நமக்கு
ReplyDeleteகையும்,காலும் தானே மிச்சம்?
காடு விளையட்டும் பொண்ணே - நமக்கு
காலம் இருக்குது பின்னே .
மாடாய் உழைப்பவன் வாழ்கையிலே
பசி வந்திட காரணம் என்ன மச்சான் ?
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதால் வரும் தொல்லையடி!
.---- தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
எமது பொங்கல் நல் வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteபொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் ஐயா!
ReplyDeleteஅன்பும் அருளும் அகத்துக்குள் பொங்கட்டும்!
இன்பத் தமிழ்போல் இனித்து!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள் ஐயா!
ReplyDelete