Saturday, August 12, 2017

பேரளவு பெய்தமழை கவிதைக் கண்டோ-இன்று ஓரளவு தந்துவிட உவகைக் கொண்டேன்!




பேரளவு பெய்தமழை கவிதைக் கண்டோ-இன்று
ஓரளவு தந்துவிட உவகைக் கொண்டேன்
சீர்ளவு குறையாமல் நன்றி விண்டேன்-நாளும்
நீரளவு மேன்மேலும் தருதல் தொண்டே!

புலவர் சா இராமாநுசம்

Friday, August 11, 2017

வாசலுக்கு நீர்தெளித்தல் போல நாளும்-ஏனோ வந்துவந்து போகின்ற மழையே !



வாசலுக்கு நீர்தெளித்தல் போல நாளும்-ஏனோ
வந்துவந்து போகின்ற மழையே !மேலும்
பூசலுக்கும் ஆளாகி பதவி வெறியில்-ஆள்வோர்
போடுகின்ற போட்டிமிக ,அந்தோ நெறியில்
பேசலுக்கு ஏதுமில்லை பதறும் நெஞ்சம்-நாங்கள்
பிழைக்கவழி காட்டுவாயா மழையே தஞ்சம்
நாசமிக ஆவதற்குள் திரண்டு வருவாய்-என்றே
நம்புகின்றோம் மாமழையை விரைவில் தருவாய்!!


புலவர் சா இராமாநுசம்

Thursday, August 10, 2017

நான் எழுதிய இரங்கல் கவிதை! !





நான் எழுதிய இரங்கல் கவிதை!

என் அருமை நண்பர் புலவர் வேள்நம்பி மறைந்து ஓராண்டு ஆனதை ஒட்டி  நான் எழுதிய இரங்கல் கவிதை!


தனக்குநிகர் இல்லையென உதவும் நண்பர்இவர்
தன்னிடத்தே கொண்டவராய் விளங்கும் பண்பர்
எனக்குமவர் பல்வகையில் உதவி செய்தார்ஈடே
இல்லாத அன்பதனை மழைபோல் பெய்தார்
மனக்கவலை ஏதுமில்லா குடும்ப வாழ்வேஏனோ
மறைந்தீரே மின்னலென பலரும் அழவே   
குணக்குன்றே வேள்நம்பி! நன்றா இதுவே-என்றே
குமுறுகின்ற நெஞ்சுதனைத் தேற்றல் எதுவே!
 
அகழ்வாரைத் தாங்குநில பொறுமைக் கொண்டே-தீமை
அடுத்தடுத்து செய்தாலும் விளக்கி விண்டே
இகழ்வாரும் பாராட்ட வாழ்ந்தார் இவரேஅதுவே
இயல்பாகக் இறுதிவரை மறைந்தார் எவரே!
புகழ்வாராம் போகவிட்டுப் புறமே பேசும்தீய
புல்லர்களின் முகம்காண அகமே கூச
திகழ்வாராம் வேள்நம்பி மறக்கப் போமோநாளும்
தேம்புகின்றோம் மீண்டுமுமை காணல் ஆமோ

அப்பப்பா நம்மிடையே மலர்ந்த நட்பே-கற்ற
அன்னையவள் தமிழ்தந்த அழியா பொட்பே
தப்பப்பா தவிக்கமனம் விட்டுச் சென்றீர்மீண்டும்
தவறாது சந்திக் வருவேன் என்றீர்
செப்பப்பா செப்பாது போனீர் எங்கே-அதனால்
செயலற்றார் எனைப்போல பலரும் இங்க
எப்பப்பா கண்போமென ஏங்க மனமேசேலம்
என்றாலே துயரத்தில் மூழ்கும் தினமே

நீரின்றி நானில்லை என்றே வாழ்ந்தோம்-அந்த
நினைவின்றி சென்றீரா துயரில் வீழ்ந்தோம்
ஏரின்றி உழவுதனை செய்வார் போன்றேஇன்றே
என்நிலமை ஆயிற்று சொல்லில் சான்றே
காரின்றே வான்மழையே வருமா என்றே- வாடிக்
காத்திருக்கும் உழவன்தன் நானும் இன்றே
வேரின்றி அற்றமரம் அந்தோ நானே-மேலும்