Monday, May 15, 2017

ஆளும் அரசு இருக்கிறதா-இங்கே ஆட்சி ஒன்று நடக்கிறதா?




ஆளும் அரசு இருக்கிறதா-இங்கே
ஆட்சி ஒன்று நடக்கிறதா
நாளும் மக்கள் படும்தொல்லை-காணில்
நவின்றிட இயலா! எதுஎல்லை
மூளும் மக்கள் போராட்டம்- உடைந்து
முடங்கிட அரசின் தேரோட்டம்
வாளும் பேடிகை ஆயிற்றே-மக்கள்
வாழ்வே வீணாய் போயிற்றே


புலவர் சா இராமாநுசம்

Sunday, May 14, 2017

அன்னையர் தினம் நினைவுக் கவிதை!



அன்னையர் தினம்!

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?



உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...