அன்பின்
இனிய வலையுலக உறவுகளே!
வணக்கம் கணகில!
வயதால் மட்டுமே மூத்த வலைப்பதிவராகிய நான் உங்கள் பார்வைக்கு
பணிவன்போடு
வைக்கும் ஒருசில கருத்துகள்!
இன்றைய
வலையுலகம் ஆரோக்கியமாக இயங்கவில்லை என்பது , என்
கருத்து!
இனம் காணமுடியாத ஒருவகைப் போட்டி ,மனப்பான்மை
உள்ளுக்குள் உருவாகி வருகிறது! இதனைக் கூர்ந்து
பார்தால் உண்மை தெரியும் மேலும் அதிகம் விளக்கினால் அதுவே தீமை தரலாம்
ஆனால்
ஒன்றை இங்கே அழுத்தமாக செல்வதெனில் அதற்கு!!!!!!!
காரணம் தமிழ்மணத்தில் வைக்கப் பட்டுள்ள ரேங்குப்
பட்டியலும்
மதிப்பெண் பட்டையும்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது
என்னுடைய ரேங் பனிரெண்டில் இருந்த போதும் நான்
கவலைப் பட்டதில்லை இன்று நான்கில் இருப்பது
கண்டு மகிழவும் இல்லை
அது மட்டுமல்ல,!வலைப்பதி ஆனாலும் ,முகநூல் ஆனாலும்
என்
கருத்துகளை
எழுதுவதில் மட்டுமே நான் கருத்தாக இருப்பேன்
இன்று
வலைப்பதிவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்
சுருங்கி
விட்டது என்பது பலரும் அறிந்த உண்மை!
உள்ள சிலரும் விலகி செல்லாமல் இருக்க வழிகாண
வேண்டும்
சிந்திப்போம் செயல்படுத்துவோம்!
உங்கள்
கருதென்ன!!!?
புலவர் சா இராமாநுசம்
இன்றைய உண்மை நிலையை வெளிப்படையாக சொன்னீர்கள் ஐயா.
ReplyDeleteநானும்கூட இதனைக்குறித்து வெளிப்படையாக எழுதினால் மனக்கஷ்டம் வரலாம்.
வெருமனே தமிழர் ஒற்றுமை ஓங்குக என்று சொல்வதால் பலனில்லை.
எல்லா பதிவர்களும் (தற்பொழுது எழுதிக் கொண்டு இருப்பவர்கள்) பிறரின் பதிவுகளுக்கு சென்று கருத்துரையால் கலந்து பேசி மகிழலாம் இங்கும் அரசியல் நிகழ்கின்றது இதை யாரும் மறுக்க முடியாது.
முகநூலுக்குள் மூழ்கி விட்ட பதிவர்கள் வலையுலகம் திரும்ப வேண்டும் என்பது எமது அவா!
உன்னைப்போல் என்னால் எல்லோருடைய பதிவுக்கும் செல்ல எனக்கு நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு...
நான்கு பதிவு எழுதி விட்டு எவருடைய தளமும் செல்ல நேரமில்லை என்று சொல்லாமல், மூன்று பதிவு எழுதி விட்டு ஒரு பதிவுக்கான நேரத்தை பிறரின் தளம் செல்வதில் ஒதுக்கலாமே...
எமது கருத்து யார் மனதையும் புண்படுத்த அல்ல!
த.ம.பிறகு.
உங்க வாதம் மிகச்சரிண்ணே.
Deleteசரியாக சொல்லறீங்க ஜி
Deleteஎழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது கண்கூடு.
ReplyDeleteதமிழ்மணம் ரேங்க் பற்றி நான் கவலை கொள்வதில்லை ஐயா.
பெரியவங்க நீங்க சொல்லிட்டீங்க சுலபமா
ReplyDeleteஉங்கள் கூற்று எல்லாம் மிகவும் சரி
எனக்கு புரிந்த அளவு ரொம்பவும் குறுக்கியவட்டத்தில்அமைப்பில் இருப்பதுபோல் தெரிகிறதுஇவ்வளவுதான் போதும் நான்கு பேர் அப்படினு விளங்க முடியா வழிக்குள் இருப்பது போல் அதனால் இது தழைப்பதற்க்கு மிக காலம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன் ஐயா
தமிழ்மணம் பற்றி எதுவும் தெரியாது தெரிந்ததும் இப்பதான் அதுவும் துளியொண்டு அதுபற்றி எதுவும் சொல்வதர்கு இல்லை அது இவ்வளவு எல்லோரும் கூறும் படி முக்கியமென்று இதுவரை தெரியாது தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை அதெல்லாம் தொடர்ந்து பதிவு எழுதுபவர்களின் கவலை
சென்ற வாரம் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வளாகத்தில் நடைபெற்ற, பதிவர்கள் சந்திப்பிலும் இதுபற்றி பேசப்பட்டது அய்யா.
ReplyDeleteஆரோக்கியம் என்பது எங்குமே எதிலுமே குறைந்து விட்டது. எல்லாம் சரியாக இருக்கோணும் என எதிர்பார்க்க முடியாது, சிலசமயம் மனக்கஸ்டம் வரும்தான், ஆனா அதை பெரிதுபடுத்திடாமல் நாம் நம் வேலையைப் பார்க்க வேணும்.
ReplyDeleteவலைப்பதிவர்கள் பலவிதம்... சிலர் எப்போதாவது பதிவு போடுபவர்கள், சிலர் வாரம் ஒரு முறை, சிலர் தினமும் சிலர் வாரத்தில் சில நாட்கள் இப்படி இருக்கும்போது,
ஒரு உதாரணத்துக்கு மட்டுமே சொல்கிறேன், சிலர் நினைப்பது தம் குஞ்சு மட்டுமே பொன் குஞ்சு எல்லோரும் தம்மிடம் வரோணும் என...
இன்னொருவிதம், ஒரு தடவை வந்து விட்டுப் போய் விடுவார்கள்... வந்திட்டார்களே என நாம் அவர்களின் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் ஓடுவோம்.. ஆனா திரும்ப வரமாட்டினம், பின்பு ஒரு கட்டத்தில் நாமும் போவதை நிறுத்தினால், உடனே துடிச்சுக் கொண்டு ஒரு தடவை ஓடி வருவினம்.
இன்னொருவகையினர்... வாரம் 6,7 போஸ்ட் போடுகிறார்கள் எனில்.. நாம் முடிந்தவரை போவோம், சில போஸ்ட்டுக்கு போகாமல் விட்டிட்டு, நாம் வாரம் ஒரு முறையோ இல்ல.. 7,8 நாட்களின் பின்போ ஒரு போஸ்ட் போட்டால், வர மாட்டினம் .. ஏனெனில் தம் அனைத்துப் போஸ்ட்டுக்கும் நாம் வரவில்லையாம்ம்... இப்படி எல்லாம் கணக்குப் பார்ப்போரிடமிருந்து, நான் ஒதுங்கி இருக்கவே நினைப்பேன்ன்...
சந்தோசம், நட்புக்காக வந்துபோவோரிடம் எப்பவும் போகத் தோணும்.. கணக்குப் பார்ப்போரை விட்டிடத்தான் தோணும்...
அதிரா அருமையாக சொன்னீர்கள் சரியாக கணித்தமைக்கு பாராட்டுகள்.
Deleteஅதிரா:-))பின்னுட்டம் கூட சூப்பர் நியாமாய் நகைச்சுவையுடன்
Deleteஇந்த மனக்குமுறல்கள் பெரும்பாலும் எல்லோர் மனதிலும் இருக்கும்:).. நன்றி...
Deleteகில்லர்ஜி சொன்னதைப்போல, சிலர் இருக்கிறார்கள்.. தனக்கு ஏனைய புளொக்குகளுக்குப் போய் கொமெண்ட் போட நேரமேஏஏஏஏஏஏ கிடைக்குதில்லை என.. சிம்பத்தி கலெக்ட் பண்ணுவார்கள்.. ஆனா தம் புளொக்கை ஒழுங்கா எழுதிக்கொண்டிருப்பார்கள்... முடியல்ல புலவர் ஐயா:)..
ReplyDeleteகில்லர்ஜி கருத்தையும், அதிரா கருத்தையும் வழிமொழிகிறேன். ரேங்க், வோட்டு ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதிக் கொண்டிருப்பதே நலம்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்ஜி
Deleteஹா ஹா ஹா என் கருத்தையும் படுபயங்கரமாக( ஒரு எக்ஸ்ரா சேர்த்தேன் தப்போ?:)) வழிமொழிந்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
Deleteசரி யார் வராவிட்டால் என்ன ...முடியும்போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு எல்லா இடமும் போக நினைப்பேன்ன்... ஆனா அதுவும் தப்பாகிடும்:).. இது ஒரு லூஸ் என முடிவு கட்டிப்போடுவினம்:). ஹா ஹா ஹா ஹையோ நன்மைக்கும் காலமில்லை இப்போ:)..
தமிழ்மணம் வலைப்பதிவு சேகரிப்புத் தளம் இல்லாவிட்டால் தமிழ்ப்பதிவுலகமே இருண்டுவிடும். யார் என்ன பதிவுகள் போடுகிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடும்.
ReplyDeleteபோட்டி இருப்பது நல்லதுதானே. போட்டி இருந்தால்தான் வளர்ச்சி ஏற்படும்.
முன்னொரு காலத்தில் பதிவுலகத்தில் போட்டி பொறாமை சண்டை சச்சரவு இருந்தன. ஆனால் அவை பதிவுலகை சுறுசுறுப்பாக வைத்திருந்தன. இன்றுள்ள மந்த நிலைக்கு என்ன காரணம் என்று புரியவில்லை.
வலையில் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது ஐயா
ReplyDeleteதமிழ் மணம் என்பதை மற்றவர்களுக்கு நம் பதிவினைக் கொண்டு சென்று சேர்க்கும் ஒரு கருவியாகத்தான் பார்ப்ப வேண்டுமே தவிர, போட்டிக்கானத் தளமாகப் பார்க்கக் கூடாது ஐயா.
தமிழ் மணத்தில் ஒருவர் தினம்தோறும் பதிவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப் பதிவினை ஏழே ஏழுபேர்மட்டும் படிதது, வாக்கிட்டால், மாதத்திற்கு 210 ஓட்டு, படித்தவர்களும் 210 பேர்தான். தமிழ் மணத்தில் அப்பதிவர் முன்னனிப் பதிவர் ஆகிவிடலாம்.
ஆனால் ஒரு பதிவினை ஆயிரக் கணக்கில் வாசகர்கள் படித்தாலும், தமிழ் மணம்வாக்கு அவர்களிடம் இல்லாமல் இருப்பதாலும், பல சமயங்களில், தமிழ் மணம் வாக்களிக்க கூடதல் நேரம் செலவிட விரும்பாதவர்களும், வாக்களிக்காமல் நகர்ந்துவிடுவதால், அவர் பின்னனிப் பதிவர் ஆகிவிடுகிறார்.
அதனால் ஓட்டை நம்பாமல், நம்மை வாசிப்பவர்களைக் கணக்கில் கொண்டு தொடர்ந்து எழுதுவது நல்லது என்று நினைக்கின்றேன் ஐயா
இன்று முகநூல் சென்றவர்கள் அனைவருமே, தங்களின் பதிவிற்கு, பிறரது கருத்தும் ஆதரவும் கிடைக்காதவர்களாகவே பெரும்பாரம் இருப்பார்கள்.
எனவே காணும் தளங்களில் எல்லாம்வாக்களிக்காவிட்டாலும், கருத்துரையினை வழங்கினாலே, பதிவர் உலகம் புத்துயிர் பெறும் என்று எண்ணுகின்றேன் ஐயா
தம +1
வலையில் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது ஐயா
ReplyDeleteதமிழ் மணம் என்பதை மற்றவர்களுக்கு நம் பதிவினைக் கொண்டு சென்று சேர்க்கும் ஒரு கருவியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, போட்டிக்கானத் தளமாகப் பார்க்கக் கூடாது ஐயா.
தமிழ் மணத்தில் ஒருவர் தினம்தோறும் பதிவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப் பதிவினை ஏழே ஏழுபேர்மட்டும் படித்து, வாக்கிட்டால், மாதத்திற்கு 210 ஓட்டு, படித்தவர்களும் 210 பேர்தான். தமிழ் மணத்தில் அப்பதிவர் முன்னனிப் பதிவர் ஆகிவிடலாம்.
ஆனால் ஒரு பதிவினை ஆயிரக் கணக்கில் வாசகர்கள் படித்தாலும், தமிழ் மணம்வாக்கு அவர்களிடம் இல்லாமல் இருப்பதாலும், பல சமயங்களில், தமிழ் மணம் வாக்களிக்க கூடுதல் நேரம் செலவிட விரும்பாதவர்கள், வாக்களிக்காமல் நகர்ந்துவிடுவதாலும், அவர் பின்னனிப் பதிவர் ஆகிவிடுகிறார்.
அதனால் ஓட்டை நம்பாமல், நம்மை வாசிப்பவர்களைக் கணக்கில் கொண்டு தொடர்ந்து எழுதுவது நல்லது என்று நினைக்கின்றேன் ஐயா
இன்று முகநூல் சென்றவர்கள், தங்களின் பதிவிற்கு, பிறரது கருத்தும் ஆதரவும் கிடைக்காதவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள்.
எனவே காணும் தளங்களில் எல்லாம்வாக்களிக்காவிட்டாலும், கருத்துரையினை வழங்கினாலே, பதிவர் உலகம் புத்துயிர் பெறும் என்று எண்ணுகின்றேன் ஐயா
தம +1
(முந்தையக் கருத்துரையில் பல எழுத்துப் பிழைகள் எனவே இக்கருத்துரை)
நன்றி ஐயா
கரந்தையார் கருத்தையும் வழிமொழிகிறேன்.
Deleteமிக அருமையா சொல்லியிருக்கீங்க சகோ
Deleteதாம்தமாக வந்தமைக்கு வருந்துகிறோம் ஐயா....கில்லர்ஜி, அதிரா மற்றும் கரந்தை சகோ அவர்களின் கருத்தை வழிமொழிகிறோம்.
ReplyDeleteநாங்கள் ரொம்ப இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நாம் பதிவு போடுகிறோம்...வாசிப்பவர்கள் வாசிக்கட்டும் என்று இருந்து விடுகிறோம். ஆனால் வாசித்துக் கலந்துரையாடல் இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
அதானே பார்த்தேன் என் பெயரும் இருக்கு:) ஹா ஹா ஹா...
Deleteநான் அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் இனிமேலும் ரேங்கைப் பற்றியோ..ஓட்டுபெட்டியை பற்றியோ..எதையும் கண்டு கொள்வதில்லை.. வந்தால் வரவில் வைப்பேன் வராவிட்டால் செலவு சேர்த்து விடுவேன்...படிப்பதற்கும் எழுதுவதற்கும் வாய்ப்பே கிடைப்பதில்லை அய்யா...
ReplyDelete