Friday, December 15, 2017

எதிலும் தெளிவே காணோம்!-விலை ஏற்றம் உயர்வே! நாணோம்!




போகப் போகத் தெரியும் –தாமரைப்
பூவின் வாசம் புரியும்
ஏகம் இந்தியா என்றே- நிலை,
இருக்குமா ! இல்லையா !நன்றே!
சோகம் தீரும் என்றார்!-உறுதி
சொல்லி அவரும் நின்றார்!
தாகம் தீர வில்லை-மேலும்
தருவ தென்னவோ தெல்லை!

பானை சோறு பதமே- நாம்
பார்கு மந்த விதமே
ஆன தய்ய நன்றே!-நடக்கும்
ஆட்சி முறையும் இன்றே!
போன போக்கு போன்றே-நீரும்
போவ தேனோ இன்றே
கானல் நீரா ஐய்யா-மக்கள்
கண்ட கனவு பொய்யா

எதிலும் தெளிவே காணோம்!-விலை
ஏற்றம் உயர்வே! நாணோம்!
பதிலும் முறையாய் இல்லை-போகும்
பாதை நீங்காத் தொல்லை!
மதில்மேல் பூனை ஆக- மக்கள்
மனமே மயங்கிப் போக,
விதியே இதுதான் போலும்-என்ற
வேதனை நாளும் மூளும்!

புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. மாற்றம் வரும் சாத்தியம் கண்ணுக்கு தெரியவில்லையே ஐயா.
    த.ம.பிறகு.

    ReplyDelete
    Replies
    1. எந்த திக்கில் பார்த்தாலும் தெரிலண்ணே

      Delete
  2. இப்போதைய கவலை ஜனவரியில் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது என்று வரும் செய்திதான்! அப்படி எல்லாம் இல்லை என்கிறார்கள் பிரதம மந்திரியும், நிதி அமைச்சரும்...​

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு செய்தியா ஸ்ரீராம்..ஓ!!! அறியவில்லை


      கீதா

      Delete
  3. இதுதான் ஐயா விதி. ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

    ReplyDelete
  4. இதுவும் கடந்து போகும் ஐயா
    தம+1

    ReplyDelete
  5. போகப் போக என்னத்த தெரியுறது அய்யா..முக்காலமும் இன்றே அறிய வைத்துவிட்டார்கள் அய்யா...

    ReplyDelete
  6. நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி என்ற பாரதியின் பாடல் வரிகள் நினைவில் வந்தன.

    ReplyDelete
  7. "பானை சோறு பதமே- நாம்
    பார்கு மந்த விதமே
    ஆன தய்ய நன்றே!-நடக்கும்
    ஆட்சி முறையும் இன்றே!" என்ற நிலைமை
    மக்கள் மனதில் மாற்றம் தர வேண்டும்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...