ஒக்கி’ புயலில் சிக்கி குமரி மாவட்டம், நீரோடி கிராமத்தில் மட்டும் 36 மீனவர்கள் இறந்துள்ளதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. என்ற செய்தி அறிந்து
உள்ளம் மிகவும் வருந்துகிறது அவர்கள் ஆன்மா
சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன் உடனடியாக அரசு அவர்கள் குடும்பம் நலமுற வாழ ஆவன செய்ய வேண்டுகிறோம்
ஓகி புயலால் மராட்டியத்தில் தவிக்கும் தமிழக மீனவ மக்களுக்கு கேரள அரசு உதவி!-செய்தி!ஆனால் தமிழக அரசோ இங்கே இடைத்
தேர்தலில் , தாரை தப்பட்டை ஒலிக்க ஒட்டு வேட்டை ஆடுகிறது இதைவிட கேவலம் உண்டா
உறவுகளே!
சன் டி வி ஒளிபரப்பும் இரண்டு தொடர்களுக்கு(விநாயகர், அழகு) பரிசு தினமும் ஆயிரம் நேயர்களுக்கு தருவதாக ஒலிபரப்புவதை அறிவீர்கள்! ஆனால் இதுவரை யாரும் பெற்றதாகத்
தெரியவில்லை! உங்களில் யாரேனும் பெற்றிருந்தால் இங்கே குறிப்பிட வேண்டுகிறேன்
ஆசை என்பது அளவற்றது !
நடந்து போறவன் சைக்கில்
வாங்க ஆசைப்படுவான் சைக்கில் போறவன் மோட்டார் சைக்கில் வாங்க ஆசைப்படுவான் மோட்டார் சைக்கில்காரன் கார் வாங்க ஆசைப்படுவான் ! இதுபோலத்தான் அனைத்தும்
ஆசை என்பது ஒரு மெகாத் தொடரைப் போல வளர்ந்து கொண்டே போகும்!
நடிகர் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது அவருக்கு நல்லதே! அதனால்
அவருக்கு மிகப் பெரிய விளம்பரத்தை, ஆளும் அரசு
தேடிக் கொடுத்துள்ளது !அவரை நிற்க விட்டிருந்தால்
பத்தோடு ஒன்றாக ஆகி யிருப்பார்
உறவுகளே!
முகநூலில் சில(ஆண்,பெண்) பதிவர்கள் தங்கள் பதிவுகளோடு தங்கள்
புகைப் படங்களையும் பெரும்பாலும் வெளியிட்டு கொள்வது தேவைதான என்பதை அன்புகூர்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்
நடிகர் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது தவறுமட்டுமல்லஅதில் ,மத்திய,மாநில அரசுகளின் சதியும் அடங்கியுள்ளதது என்பதும் ஆகும்! மேலும் ஆளும் கட்சி வெற்றி பெற பல்வேறு வழிமுறைகள் கையாளப்படும்!
உறவுகளே
குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் என்பது போல
ஆர் -கே நகர் தேர்தலில் யாரோ நடிகர் விஷாலை போட்டுயிட வைத்துள்ளார்கள்! பார்ப்போம்!
புலவர் சா இராமாநுசம்
சரியாக அலசி உள்ளீர்கள் ஐயா
ReplyDeleteஇறந்த மீனவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
த.ம.1
நிறையத் தகவல்கள் கிடைத்திருக்கு உங்கள் மூலம். வோட்டும் போட்டிட்டேன்:)
ReplyDeleteதொலைக்காட்சிகள் நடத்தும் போட்டிகள் எந்த அளவுக்கு உண்மை?
ReplyDeleteஅதிகமாகும் ஆசை பற்றி நான் கூட ஒரு (அல்ப) கவிதை முன்பு எழுதி இருந்தேன்!
உண்மை வரிகள் ஐயா
ReplyDeleteநன்றி
தம+1
முகநூலில் வாசித்த வரிகள்...
ReplyDeleteமுற்றிலும் உண்மை ஐயா...
இங்கே வாசிக்கத் தந்தமைக்கு நன்றி புலவர் ஐயா.
ReplyDelete