Wednesday, November 8, 2017

சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை !



எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு
எங்கெனும் தேடியும் காணல்அருமை
இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம்
இறையாண்மை ஆராய பொழுதே விடியும்
மங்காது நடக்குதே மக்களவையே-அங்கு
மார்தட்டி தோள்தட்டி கேட்டல் எவையே
சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை
செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை

இல்லாத ஒன்றினை எதற்கு நானே-கவிதை
எழுதிட வேண்டுமா முற்றும் விணே
சொல்லாதீர் நானிதை சொன்னதாக-மீறி
சொன்னாலே வாழ்வினில் அமைதிபோக
பொல்லாத விளைவென்னை தேடிவருமே-வீண்
பொல்லாங்கு நாள்தோறும் நாடிவருமே
நல்லோரே இதுதானே மனித உரிமை-நீங்கள்
நம்பங்கள் அதுதானே எனகுப் பெருமை

புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. அருமை ஐயா உண்மையான வார்த்தை
    த.ம.நாளை.

    ReplyDelete
  2. அழகிய கவிதை.
    நீங்க என் பக்கம் வராட்டிலும் இங்கிருந்தே சிரிச்சுக்கொண்டிருந்தீங்க:) பின்பு அதையும் தூக்கிட்டீங்கபோல இருக்கே:).. பார்த்தேன் கொமெண்ட் போட வருமுன் எடுத்திட்டீங்க ஏன்ஹா.. ஹா ஹா

    ReplyDelete
  3. பொல்லாத விளைவென்னை தேடிவருமே-வீண்
    பொல்லாங்கு நாள்தோறும் நாடிவருமே ... இப்படித்தான் சொல்ல விரும்புவதைச் சொல்லாமல் பலரும்செல்கின்றனர்

    ReplyDelete
  4. கருத்துக் சுதந்திரத்துக்கும் ஒரு எல்லை உண்டு என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    ரசித்தேன் கவிதையை.

    ReplyDelete
  5. ரசிக்கும்படியான கவிதை, உங்கள் பாணியில்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...