Monday, November 27, 2017

தேர்தல் விளையாட்டும் நடைபெறும் கூத்துகளும்



நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்-ஆயின்
காயா பழமா விளையாட்டே-அந்தோ
கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!-மேலும்
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய்ப் பிரிந்தாரும்!-சாடும்
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்!

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே!-ஏனோ
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்!-அதுவே
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்!-அவரே
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும் போகட்டும்!

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்!-மனதில்
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்!-ஏதும்
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல்!-கண்டதை
இங்கே நானும் எழுதுவ-என்னுள்
இருப்பதும் நீயா நானேதான்

புலவர் சா இராமாநுசம்

5 comments:

  1. தேர்தலும் இனி விளையாட்டுதான் ஐயா
    த,ம,1

    ReplyDelete
  2. அவர்களுக்கு இது விளையாட்டு... நமக்கு பெரும்பாடு!

    ReplyDelete
  3. அருமையாக இருக்கு புலவர் ஐயா

    ReplyDelete
  4. நமக்குத்தான் வேதனை ஐயா
    தம +1

    ReplyDelete