தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவையே
சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-இன்றே
அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பூர்-உம்மின்
சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா
ReplyDeleteத.ம.பிறகு.
இப்பொழுது எல்லாம் சங்கேமே... சங்கிகளாக மாறிவிட்டது அய்யா...!!!
ReplyDeleteஅருமை ஐயா நல்லது நடக்கட்டும்
ReplyDeleteநடையில் மட்டுமல்ல, மனதிலும் சிங்கமாக இருக்கச் சொல்றீங்க:)..
ReplyDelete