Thursday, November 23, 2017

விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும் விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!



விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
    விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை ஏதோ பதிவை- நாளும்
     எழுதிகிறேன்! வலைதன்னில்! வாட்ட, முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
    பொறுத்திடுவீர்  தக்கோரே! வருக! வருக!

புலவர்  சா  இராமாநுசம்

10 comments:

  1. வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்ப்பா

    ReplyDelete
  2. மருந்து போலப் பதிவுகள் கொடுத்தாலும் விருந்து போல உண்டு மகிழ்வோம். உற்சாகமாய்ப் பதிவிடுங்கள்.

    ReplyDelete
  3. மனதின் சந்தோசம் உங்கள் உற்சாகத்தை கூட்டும் ஐயா .தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  4. வயதாவதை இரு வகையில் அணுகலாம் நான்பதிவாக்கி இருக்கிறேன் செய்யாத குற்றத்துக்கு தண்டனை என்றும் முதுமை ஒரு பரிசு என்றும் பாருங்கள் 1) http://gmbat1649.blogspot.com/2013/04/blog-post_25.html

    2) http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_29.html

    ReplyDelete
  5. மனதின் மகிழ்ச்சியே உற்சாகத்தின் ஊற்று.
    தொடர்ந்து எழுதுங்கள் ஐயா...

    ReplyDelete
  6. வயது எப்பவும் உடலுக்கல்ல,, மனதுக்கே... மனது உற்சாகமாகவும் இளமையாகவும் இருந்தால் உடம்பும் அதுக்கு அசைந்து இடம் கொடுக்கும்...

    ReplyDelete
  7. இயன்றவரை இயற்றுங்கள் ஐயா கவிதையை.... நாங்கள் இருக்கிறோம் வாசிக்க....
    த.ம.4

    ReplyDelete
  8. உங்களது இளமைகால அனுபவத்தை பதிவாக்க்குங்கள் ஐயா. முதுமை முதுமை என்று மட்டும் நினைத்து கொண்டு இருந்துவிடாஅதீர்கள் அது சோர்வை தரும். எண்ணமே வாழ்வு மனதை இளமையாக்கினால் வாழ்க்கையும் இளைமையாகிவிடும்.


    இங்கே வயதான ஆண்களை கூப்பிடும் போது ஹலோ யங்மேன் என்றுதான் அழைப்போம் அது போலவே இனிமேல் உங்களையும் ஹாலோ யங்மேன் அன்றுதான் அழைக்கப்போகிறேன்...

    ஒகே வா ய்ங் மேன்

    ReplyDelete
  9. மருந்தெல்லாம் மன நிலத்துக்கு(நலம்) தானே... சந்தோஷம் தான் ஐயா முக்கியம் எல்லவற்றையும் தாங்க.... தமிழ் உங்களை கொஞ்சும் வரை நீங்க இளமையாகத்தான் இருக்கிறீர்கள்

    ReplyDelete
  10. நீங்கள் முதுமை பற்றி எழுதிய கவிதை பற்றிய தகவல் வேண்டுமே
    சார்

    ReplyDelete