பழகிவிட்டால் எல்லாமே
சரியாய்ப் போகும் –ஆளுநர்
பார்வையிடும் அதிகாரம்! அதுபோல் ஆகும்!தொழுதுகெட்ட ஆட்சி-போல எதையும் தாங்கும்-ஏழை
தொல்லைகளோ குறையாது ! எவ்வண் நீங்கும்
அழுதுகிட்டே மீன்பிடிக்கும் மீனவன் சாக -அவன்
அல்லல்பட கண்டாலும் காணா தாக
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –ஆளுநர் பார்வையிடும் அதிகாரம்! அதுபோல் ஆகும்!
பொழுதுமுட்ட குடிக்கின்றான் கவலை அகல –இல்லம்
போனபின்னர்
அவன்செயலை எடுத்துப் புகல!
விழுதுகளாம் பிள்ளைகளும்
மனைவி என்றே –படும்
வேதனையை
விளக்குவதும் எளிதும் அன்றே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –ஆளுநர் பார்வையிடும் அதிகாரம்! அதுபோல் ஆகும்!
நஞ்சுண்ட விவசாயி
கண்டோம் இன்றே –வரும்
நாட்களிலே
நடக்குமிது காணும் ஒன்றே!
பஞ்சுண்டு நெய்வதற்கும்
ஆலை யுண்டே –ஆனா
பலநாளாய் மூடியது அரசின்
தொண்டே!
பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –ஆளுநர் பார்வையிடும் அதிகாரம்! அதுபோல் ஆகும்!
புலவர் சா
இராமாநுசம்
உண்மையான அவலநிலையை அழகாக விளக்கிய கவிதை ஐயா.
ReplyDeleteத.ம.பிறகு
த,ம,3
Deleteஉண்மைதான் பழகும்வரைதான் பிரச்சனை, பழகிட்டால் எல்லாம் சரி
ReplyDeleteஆக்சுவலி ஆளுநர் இப்படிதான் இருக்கனும். ஆனா, நமக்கு வாய்த்த ஆளுனர்கள் பதவிப்பிரமாணம் செய்யவும் ராஜ்பவன்ல டீ விருந்து வைக்கவும்தான்ன்னு நிரூபிச்சிருக்காங்க.
ReplyDeleteஉண்மை ஐயா பழகத்தான் முரண்டு பிடிக்கும் மனது
ReplyDeleteபழக்கி விடுகிறார்கள்!
ReplyDeleteஉண்மைஐயா
ReplyDeleteதம+1