சின்னஞ் சிறுக்குழவி
சிங்கார இளங்குழவி
கன்னம் குழிவிழவும்
களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முகமாகும்
அன்றலரும் தாமரைபோல்
தன்னை மறந்ததவளும்
தாலாட்டு பாடுவளாம்
பூவின் இதழ்போல
பொக்கை வாய்விரிய
நாவின் சுவைஅறிய
நறுந் தேனைதடவிட
பாவின் பண்போல
பைந்தமிழ் சுவைபோல
காவின் எழில்போல
களிப்பாயே தேன்சுவையில்
கண்ணே நீ உறங்கு
கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ்கின்ற
வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்காமல்
வரைந்த நல்ஓவியமே
மண்ணை வளமாக்கும்
மழைத்துளி யேநீயுறங்கு
கொஞ்சும் மழலைக்கோர்
குழல்இசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லியசீர்
பாதத்தில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்ன மனம்
அடிதவறி விழுவா யென
நெஞ்சிலே சுமந்திடுவாள்
நீவளரும் வரையவளே
புலவர் சா இராமாநுசம்
பாடல் அருமை ஐயா இரசித்தேன்.
ReplyDeleteத.ம.பிறகு
த.ம.5
Deleteஅழகிய பாடல்.. மீதான் 1ஸ்ட்டூஊ வோட்டுப் போட்டேன்ன்:).
ReplyDeleteகொஞ்சும் மழலை பாடல் அழகு
ReplyDeleteமழலையின்பம்.
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteதம +1