Monday, October 9, 2017

ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!



ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது ஒன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது எதுவும்  நடக்கவில்லை-உண்மைத்
   தகவலை  எவரும் கொடுப்பதில்லை
அக்கரை இல்லா ஊடகங்கள்-நடப்பது
  அனைத்தும்  இங்கே  நாடகங்கள்
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
             
                    புலவர் சா இராமாநுசம்

10 comments:

  1. அரசியல்போல இருக்கு கவிதை.. அதனால நான் ஓடிடுறேன்:).

    ReplyDelete
  2. //அரசியல்போல இருக்கு கவிதை.. அதனால நான் ஓடிடுறேன்:).//

    நானும்!

    ReplyDelete
  3. பார்ப்போம் ஐயா ஏதாவது மாற்றம் வரும்
    தமிழ் மணம் பட்டையை காணவில்லையே...

    ReplyDelete
  4. நாம் புலம்பி என்னாகப்போகுது?!

    ReplyDelete
  5. இந்த நிலை நீடிக்காது ,நிச்சயம் மாற்றம் வரும் அய்யா :)

    ReplyDelete
  6. காலம் மாறும் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  7. நம் புலம்பலுக்கு விடிவு கிடைக்கும் என நம்புவோம் ஐயா.

    ReplyDelete
  8. ஐயா!! வரிகள் நன்று ஆனால் கவிதையில் அரசியல் நெடி போல இருக்குதே!! அரசியல் என்றால் கொஞ்சம் அலர்ஜிதான்

    கீதா

    ReplyDelete
  9. தம9 என்று நினைக்கிறோம் ஐயா

    ReplyDelete
  10. மாற்றம் வரும் என்று நம்புவோம்

    ReplyDelete