ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக
நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
கட்சிகள் செய்வது ஒன்றேதான்!
மக்கள் அவையே கூடுவதும்-உடன்
மாநில அவையே கூடுவதும்
தக்கது எதுவும் நடக்கவில்லை-உண்மைத்
தகவலை எவரும் கொடுப்பதில்லை
அக்கரை இல்லா ஊடகங்கள்-நடப்பது
அனைத்தும் இங்கே நாடகங்கள்
துக்கமே உண்டா துளிகூட-காணும்
தொடர்கதை ஆனது நாம்வாட
ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
புலவர் சா இராமாநுசம்
அரசியல்போல இருக்கு கவிதை.. அதனால நான் ஓடிடுறேன்:).
ReplyDelete//அரசியல்போல இருக்கு கவிதை.. அதனால நான் ஓடிடுறேன்:).//
ReplyDeleteநானும்!
பார்ப்போம் ஐயா ஏதாவது மாற்றம் வரும்
ReplyDeleteதமிழ் மணம் பட்டையை காணவில்லையே...
நாம் புலம்பி என்னாகப்போகுது?!
ReplyDeleteஇந்த நிலை நீடிக்காது ,நிச்சயம் மாற்றம் வரும் அய்யா :)
ReplyDeleteகாலம் மாறும் ஐயா
ReplyDeleteநன்றி
தம +1
நம் புலம்பலுக்கு விடிவு கிடைக்கும் என நம்புவோம் ஐயா.
ReplyDeleteஐயா!! வரிகள் நன்று ஆனால் கவிதையில் அரசியல் நெடி போல இருக்குதே!! அரசியல் என்றால் கொஞ்சம் அலர்ஜிதான்
ReplyDeleteகீதா
தம9 என்று நினைக்கிறோம் ஐயா
ReplyDeleteமாற்றம் வரும் என்று நம்புவோம்
ReplyDelete