Saturday, October 7, 2017

ஏழுமலை வாழும் இறைவா ! கோவிந்தா! –நானும் எழுது கின்றேன் குறைதீர பாவிந்தா!



ஏழுமலை வாழும் இறைவா ! கோவிந்தா! –நானும்
எழுது கின்றேன் குறைதீர பாவிந்தா!
வாழுகின்ற நாளெல்லாம் போற்றித் தானே-நானும்
வணங்கிடுவேன் உம்பெயரை சாற்றித் தானே
சூழுகின்ற இடர் தன்னை பெருமாளே-வானின்
சுடர்கண்ட பனியாக்கி அருள்வாய் நீயே
பாழுமனம் பட்டதெல்லாம் போதும் போதும்-மேலும்
படுவதற்கு இயலாது துயரம் ஏதும்


புலவர் சா இராமாநுசம்

17 comments :

  1. ஏழுமலையான் நமக்கு கைகொடுப்பார் ஐயா.

    ReplyDelete
  2. இந்த புரட்டாசி சனியன்று வைத்திருக்கும் உங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டுமென்பதே என் அவாவும் அய்யா :)

    ReplyDelete
  3. துயரம் தொலைந்திடும். நீடித்த நல்வாழ்வுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஏழு மலையான் கை கொடுப்பார் ஐயா...

    ReplyDelete
  5. நம்பிக்கையே வாழ்க்கை ஐயா
    வாழ்க நலம்
    த.ம.5

    ReplyDelete
  6. பெருமாள் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  7. வாழ்க்கையே நம்பிக்கைதானே ஐயா
    தம +1

    ReplyDelete
  8. Replies
    1. பா என்றால் பாடல் என்பதாம் இந்தா என்பது ஏற்றுக்கொள் என்பது பொருள்!நன்றி

      Delete
  9. ஏழுமலை வாசா எமை ஆளும் சீனிவாசா என்ற பாடல் நினைவுக்கு வந்தது. இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.

    ReplyDelete
  10. அவரவர் குறைகளை அவரவரே நீக்க வேண்டும் இல்லை அனுபவிக்க வேண்டும்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...