Friday, October 27, 2017

எம்மொழி உமது தாய்மொழி யென்றே என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே !



எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே

என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே

கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்

இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

புலவர் சா இராமாநுசம்

8 comments:

  1. தமிழ் யாரையும் கைவிடாதுப்பா

    ReplyDelete
  2. இதுக்கும் மைனஸ் ஓட்டு போட்ட புண்ணியவான் யாரோ?! அவருக்கு என்னதான் வேணுமாம்?!

    ReplyDelete
  3. அருமை ஐயா தமிழ் வாழ்க

    த.ம. ப்ளஸ் இரண்டாவது.

    ReplyDelete
  4. தமிழின் பெருமை.

    மூன்றாவது ப்ளஸ் வாக்கு.

    ReplyDelete
  5. உண்மை, தமிழ் யாரையும் கைவிடாது. நாம்தான் தமிழை கைவிடாது காக்கவேண்டும் என்று நினைக்கிறேன் ஐயா.

    ReplyDelete
  6. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு

    ReplyDelete
  7. தாய்மொழி போற்றுவோம் ஐயா
    அருமை
    தம +1

    ReplyDelete