Sunday, October 22, 2017

முகநூல் பதிவுகள்

பிறவிக் குருடன் அப்படியே வாழ்ந்து விட்டால் அதிக துயரமில்லை!பழகி விடும்
ஆனால், அவன் பார்வைப் பெற்று சிலகாலம் உலகைப்
பார்த்து மகிழ்ந்த நிலையில் மீண்டும் பார்வையை
இழந்து விட்டால் ,அவன் பெருகின்ற துன்பத்திற்கு அளவே இல்லை! அதுபோலவே வாழ்க்கையில் நாமக்கு வரும் சில நிகழ்வுகள் இஅமைந்நு விடுகின்றன!

நடுத்தர மக்கள் வாழும் இடங்களில் கேட்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம் இந்த ஆண்டு மிக மி்க க் குறைவு காரணம்
பீன்ஸ் விலைமட்டுமே கிலோ முன்னுறு(300) என்றால்
பட்டாசா வெடிக்கும் உள்ளம்தான் வெடிக்கும்

உறவுகளே!
மீன் குட்டிக்கி நீந்தக் கற்றுத்தர வேண்டுமா ? என்று
கேட்கும் மனிதன்தானே தன் குழந்தை நடக்க நடைவண்டி சொய்துத் தருகிறான் !இப்படிதான் வாழ்கையில் சிலர் ,சிலநேரங்களில் பிறருக்கு ஒதிவிட்டு தமக்கு வரும் போது அதனை மாற்றிக் கொள்வார்கள்

குளத்திலே நீரின் அளவு உயர உயர அக் குளத்தில் உள்ள நீராம்பலும் தாமரையும் அதோடு உயரும்! அது
போல ஒருவனது அறிவும் , அவன் கற்ற நூலுக்கு ஏற்ப
உயரும் என்பதாம்

ஒரு பழமொழி சொல்வாங்க!
கம்புக்கு களை வெட்டனாமாதிரி, தம்பிக்கு பொண்ணுபாத்தமாதிரி ன்னு சில செய்திகளை கிராமத்திலே விமர்ச்சிப்பாங்க அதுபோல சன் டிவி
விநாயகர் தொடரில் போட்டிகளை தினகரன் செய்தித்
தாளோடு இணைத்து அதன் விற்பனையை அதிகரிக்க
ஆவன செய்துள்ள பத்திசாலி தனத்தை பாராட்டத்தான்
வேண்டும்!வேறென்ன சொல்ல


தம்பி , விஜய் டிவியிலே வந்தா
அண்ணன் , சன்டிவியிலே வருகிறார்! போட்டி அண்ணன்
தம்பிக்கு இடையேவா!அல்லது டிவிகளுக்கு
இடையாவா! எல்லாம் பணம் படுத்தும் பாடு!
ஆண்டவனையும் விட்டுவைக்க வில்லை


மைய, மாநில அரசுகள் , திட்டங்கள் தீட்டுவது நாட்டு
மக்களின் நன்மைக்கே என்பது தவறல்ல ! ஆனால் , அத்திட்டங்கள் நடைமுறையில் வெற்றியின்றி தோல்வி அடையுமானால் அதனை மாற்றிக் கொள்வதும் தவறல்ல ! அதனைஏதோ தங்கள் மானப் பிரச்சனை யா்க எண்ணுவது தான் தவறாகும் 


 

7 comments:

  1. இதிலிருந்து எனக்கு தெரிவது புலவர் அய்யா.. எல்லா டிவித் தொடரையும் பார்த்து எழுதுகிறார்..என்று........

    ReplyDelete
  2. பதிவின் தொடக்கமே ஸூப்பர் ஐயா.
    த.ம.பிறகு

    ReplyDelete
  3. நல்லதொரு தொகுப்பு. அங்கேயும் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. எனக்கு போட்டியா கேபிள் கலாட்டாவா?!

    ReplyDelete
  5. ஓட்டு விழுந்து விட்டதாகவே சொல்கிறது ஐயா

    ReplyDelete
  6. அருமையான தொகுப்பு ஐயா
    தம+1

    ReplyDelete