Monday, October 2, 2017

அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே !



அண்ணல் காந்தி பிறந்தநாள் இன்றே
  அடிமை விலங்கை அகற்றினார் அன்றே
  திண்மை அகிம்சையாம் அறவழி என்றே
  தேடிக்  கொடுத்தார் விடுதலை ஒன்றே
  உண்மையைத் தனது உயிரெனக் கொண்டே
  உத்தமர் காந்தி செய்தார் தொண்டே
  மண்ணில் பிறந்த மாந்தரில் எவரே
  மாகாத்மா வாக மதித்தது!  இவரே!
 
  நிறவெறி தன்னை நீக்கிட வேண்டி
  நீலத்திரைக் கடல் அலைகளைத் தாண்டி
  அறவழிப் நடந்து ஆப்பிரிக்க நாட்டில்
  அல்லல் பட்டது காண்போம் ஏட்டில்
  தீண்டா மையெனும் தீமையை ஒழிக்க
  தீவிரம் காட்டிட சிலரதைப் பழிக்க
  வேண்டா மையா சமூக கொடுமை
  விட்டது இதுவரை நம்செயல் மடமை
 
  இடுப்பினில் கட்ட ஆடையும் இன்றி
  ஏழைகள் இருந்திட உள்ளம் குன்றி
  உடுப்பது இனிநான் வேட்டியும் துண்டென
  உள்ளம் நொந்தவர் உறுதியே பூண்டவர்
  எடுத்தார் விரதம் இறுதி வரையில்
  இறந்து வீழ்ந்தார் முடிவெனத் தரையில்
  கொடுத்தனர்  பாவிகள் குண்டாம்  பரிசே
  கொன்றான் மதவெறி கொடியவன் கோட்சே
 
  எத்தனை நாட்கள் சிறையில் காந்தி
  இருந்தவர் எனினும் எண்ணமே சாந்தி
  புத்தனாய் வாழ்ந்தார் போற்றிட உலகம்
  பதவியை நாடா பண்பினில் திலகம்
  சத்திய சோதனை வாழ்வாய்க் கொண்டே
  சரித்திரம் எழுதிய பெருமையும் உண்டே
  உத்தம உன்புகழ் உலகினில் வாழ்க!
  உன்திருப் பெயரொடு அகிம்சையும் சூழ்க!

                     புலவர்  சா இராமாநுசம்

13 comments :

  1. அந்த எளிய மகாத்மாவை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

    ReplyDelete
  2. மாமனிதரை நினைப்போம். அவர் வழியில் நடக்க முயற்சிப்போம்.

    ReplyDelete
  3. அண்ணலின் பாமாமை அருமை ஐயா நினைவு கூர்வோம்
    த.ம.3

    ReplyDelete
  4. பூமி இருக்கும் வரை அண்ணல் புகழ் இருக்கும் !

    ReplyDelete
  5. மகாத்மா வாழ்க! என்றும் நிலைக்கட்டும் அவரது எளிமையும் புகழும்!!!

    த ம 5

    ReplyDelete
  6. காந்தி அகிம்சை தத்துவத்தின் அடையாளம் .அருமையான கவிதை ஐயா

    ReplyDelete
  7. அழகிய நினைவுகூரல்... 7ம் வோட் போட்டேன் காந்தித்தாத்தாவுக்கு.

    ReplyDelete
  8. பாழ்பட்டு நின்ற பாரததேசம் தன்னை வாழ்வித்த மகாத்மா என்ற மாமனிதருக்கு படைக்கப்பட்ட கவிதை அருமை ஐயா!

    ReplyDelete
  9. வணக்கம் புலவர் ஐயா !

    காந்தியின் சிறப்பைக் கவியினில் தந்தீர் அருமை

    அவர்புகழ் நிலைக்கட்டும் வாழ்க நலம்

    தம +1

    ReplyDelete
  10. மாமனிதரைப் போற்றிய விதம் அருமை ஐயா

    ReplyDelete
  11. மகாத்மா போற்றுவோம்
    தம +1

    ReplyDelete
  12. மகாத்மா காந்தியை நேரில்பார்த்த நினைவு வருகிறது

    ReplyDelete
  13. Thanks for sharing, nice post! Post really provice useful information!

    An Thái Sơn là địa chỉ uy tín bán máy đưa võng hay máy đưa võng tự động tốt cho bé võng điện cho bé là địa chỉ bán máy đưa võng giá rẻ tại TP.HCM và giúp bạn tìm máy đưa võng loại nào tốt hiện nay.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...