தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்!
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக!
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை!
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை!
முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம்!
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானெனப் பண்ணாதீர்!
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்!
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப்
போக வந்திடும் முன்னேற்றம்!
எண்ணிச் செயல்படின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்!
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்!
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும் ஏமாற்றம்!
மண்ணில் எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்!
புலவர் சா இராமாநுசம்
அருமை ஐயா தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல வரிகள்.
ReplyDeleteத.ம.1
அருமை அய்யா..
ReplyDeleteஅருமை
ReplyDeleteதன்னம்பிக்கை கவிதை அருமை
ReplyDeleteஉற்சாகமூட்டும் வார்த்தைகள்.
ReplyDelete3 ஆம் வாக்கு.
எவ்வளவுதான் தன் நம்பிக்கை ஊட்டினாலும் நம்பிக்கை வளர மறுக்கிறதே....அய்யா....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விளக்கணித் திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா வாழ்க நலம் வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும்
ReplyDeleteநம்பிக்கை ஊட்டும் வரிகள் ஐயா
ReplyDeleteதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்
தம=1
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDelete-இராய செல்லப்பா சென்னையில் இருந்து.