Friday, October 13, 2017

ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே



ஏதேதோ  நடக்குது  நாட்டுனிலே –முழுதும்
   எழுதிட  முடியுமா  பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ  தெரியாது  வாழுகின்றோம்-போகும்
   திசைகாணாத் துயர்தன்னில்  வீழுகின்றோம்-மேலும்
போதாது விலைநாளும்  விண்ணைமுட்ட –மனம்
   புலம்பிட  மக்களும்  கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட  இயலவில்லை-ஏதோ
   உள்ளத்தை  வருத்திட வந்ததொல்லை
 
 
பகல்கொள்ளை அளவின்றி  பெருகிப் போச்சே-இரவு
    பயத்துடன் உறங்கிடும்  நிலையு மாச்சே!-வேறு,
புகலில்லை ! வழியின்றி!  வருந்த லாச்சே-நாடும்
    புலிவாழும்  காடாக!  மாற லாச்சே!-மேலும்
 நகலின்றி  அழுகையால் நாளும் போக-நோயால்
    நலம்மின்றி ஏழைகள் நொந்து சாக!-காணும்
 அகமின்றி ஆள்வோரே  எண்ணி பாரீர்- ஏழை
    அன்னாரைக் காப்பாற்றி வாழ்வு தாரீர்!
புலவர்  சா  இராமாநுசம்

5 comments:

  1. எழுதியாவது துக்கத்தை போக்கிப்போம்

    ReplyDelete
  2. சகோ ராஜி சொல்வது போல் எழுதித்தீர்ப்போம் ஐயா.

    ReplyDelete
  3. இந்த ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா அய்யா :)

    ReplyDelete