மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்-இன்றே
மனம்குமுறும் மக்கள்துயர் ஆய்ந்து காரீர்!
மீண்டுமிங்கே விலைவாசி உயர்ந்து போக-மேலும்
மின்சாரம் பெட்ரோல்விலை எமனாய் ஆக!
வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
விடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
அல்லல்படல்! விதியென்ப! இதுதான் போலும்!
ஆற்றாது அழுகின்ற அவலம் நன்றா -இதுவும்
ஆளுகின்ற அரசுக்கு அழகாம் என்றா?
சாற்றாது சத்தமின்றி கலங்க விட்டீர் –அந்தோ!
சரியல்ல! போராட தூண்டி விட்டீர்!
ஊற்றான ஊழலையே ஒழித்தால் போதும் -எதையும்
உயர்த்திடவே தேவையில்லை! நீங்கும் தீதும்!
மாற்றாகும் இவ்வழியே! செய்தல் வேண்டும் -என்றே
மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!
புலவர் சா இராமாநுசம்
முதல்வர் - துணை முதல்வர் இந்தக்குறைகளை இருவருமே காதில் வாங்கி கொள்ளும் நிலையில் இல்லை.
ReplyDeleteஅவங்களுக்கு யார் காலை யார் வாரி விடுவாங்கன்னு அலர்ட்டா இருக்கவே நேரம் போதல.
Deleteஐயா! இப்போது நாம் எது சொன்னாலும் அது செவிடர் காதில் ஊதிய சங்கு போல் தான் ஆகிவிடும்.
ReplyDeleteஅவர்கள் தனது நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்வதே குதிரைக் கொம்பாக இருக்கிறதே ஐயா
ReplyDeleteத.ம.4
நண்பர் கில்லர் சொல்வதுதான் உண்மை அய்யா.......
ReplyDeleteஎன்னதான் கேட்டாலும் காதில் விழவேண்டுமே ஐயா.
ReplyDeleteவேதனைதான் ஐயா
ReplyDeleteகாலம் மாறும்
தம +1