அமைதி இன்றி மனமேதான்-ஏனோ
அல்லல் படுவதோ? தினமேதான்!
சுமைதான் வாழ்க்கை என்றேதான்-நாளும்
சொல்லிட நடப்பதும் இன்றேதான்
எமையார் எவரென கேட்டிடவே-யாரும்
இல்லா துயர்மிக வாட்டிடவே
இமையே மூடினும் உறக்கமில்லை-மூளும்
இன்னலே முதுமை மறக்கவில்லை
புலவர் சா இராமாநுசம்
நட்புகள் இருக்க கவலை வேண்டாம் ஐயா... கவலை, தளர்ச்சி நீங்கி புத்துணர்வுடன் இருக்க எங்கள் பிரார்த்தனைகள்.
ReplyDeleteயாருக்கும் எளிதில் கிடைத்திடாத கவிச் செல்வம் துணையிருக்க
ReplyDeleteகவலை எதற்கு ஐயா
நாளும் ஒரு நண்பர் எனஅழைத்துப் பேசுங்கள் ஐயா
நன்றி
தம +1
கவிதையோடு பேசுங்கள் எல்லாம் நலமாகும் ஐயா
ReplyDeleteத.ம.பிறகு
த.ம.5
Deleteஉடம்பு ஒத்துழைத்தால் பேரப் பிள்ளைகளைப் பார்த்து வரலாமே அய்யா !
ReplyDeleteஉங்கள் எழுத்தை வாசிக்க நாங்கள் இருக்கிறோம். உங்கள் அனுபவங்களை உங்களின் எழுத்துகளின் மூலமாக அறிகிறோம். இன்னலை விடுங்கள் ஐயா.
ReplyDeleteவேண்டாமென்றால் நீங்குமா முதுமை. நிறைய நலம் விரும்பிகள் இருக்கும்போது வருத்தம் ஏன்?
ReplyDeleteஇமையே மூடினும் உறக்கமில்லை - என்றும்
இன்னலே முதுமை மறக்கவில்லை
என்று வருவதுதான் சரியா புலவர் ஐயா? அதாவது முதற் கண்ணியில் 4 வார்த்தை, இரண்டாவதில் மூன்றென.
முதலடியில் இறுதியில் வ்ருவது தனிச்சொல் இதுசிந்துகவி ஆகும்
Deleteநாங்கள் எல்லோரும் இருக்கிறோம்!!! ஐயா! உங்கள் நலம் விரும்பிகள்! நீங்கள் எழுதுங்கள்! எழுதிக் கொண்டே இருங்கள் கவிதைகள் பல! உங்களை துடிப்புடன் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும் ஐயா...
ReplyDeleteகீதா
த ம 7
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்க நலமுடன்
ReplyDeleteஐயா!கவிதைகளால் எங்களோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.இனி முன்பு போல் தங்கள் வலைத் தளத்திற்கு வருவேன்.உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteவணக்கம் புலவர் ஐயா !
ReplyDeleteஎதுகையோ டினிக்கப் பாடல்
..எம்முளம் மகிழ்தல் போல
முதுமையோ டிணைந்த எண்ணம்
..முடிவிலாத் தித்திப் பாகும் !
புதுமையோ டிருக்கும் இந்தப்
..புத்துல கழகு கொள்ள
மதுகையோ டுழலும் தங்கள்
..மனத்திடம் காத்தல் நன்றே !
கவலைகள் வேண்டாம் ஐயா என்றும் மகிழ்வாக இருங்கள்
வாழ்க நலம்
தம +1
வாழ்வின் ஒரு அங்கமான முதுமையின் இன்னலை எங்களோடு கவிதை மூலம் பேசி களையுங்கள் ஐயா!
ReplyDelete