Sunday, September 3, 2017

ஆட்டுகின்றார் மத்தியிலே அமர்ந்து கொண்டே ஆடுகின்ற தமிழ்நாட்டு ஆட்சி கண்டே!



ஆட்டுகின்றார் மத்தியிலே அமர்ந்து கொண்டே
ஆடுகின்ற தமிழ்நாட்டு ஆட்சி கண்டே
நாட்டுமக்கள் அனைவருமே அறிந்து கொள்ள
நாட்களுமே ஒவ்வொன்றாய் நகர்ந்து தள்ள
காட்டுகின்றார் அடிமையென ஆள்வோர் சுகமே
காத்திடவே வெட்கமது இன்றி அகமே
ஓட்டுதனைக் கேட்பதற்கு வருவார் அன்றே
உணர்த்திடுவோம் மறவாது உணர நன்றே


புலவர்  சா  இராமாநுசம்

12 comments:

  1. அவலங்கள்..... :(

    த.ம. முதலாம் வாக்கு.

    ReplyDelete
  2. இரண்டாம் தம வாக்கு என்னுது!

    ReplyDelete
  3. ஓட்டளிக்கக் காசுபணம் வாங்கிக்கொண்டு
    ஊழலையும் உவப்புடனே தாங்கிக்கொண்டு
    நாட்டினுக்கே தீமைசெய்வோர் நம்மில் உண்டு
    நாமிவர்க்கு நல்வழியைச் சொல்வோம் கண்டு
    ஈட்டுதற்கு அரசியலை வழியாகத்தான்
    இங்கிருப்போர் மாற்றிவிட்டார் பிழையாகத்தான்
    தீட்டிடுவோம் நம்மறிவைக் கூர்வாள்போல
    திருத்திடுவோம் மாக்களையும் போர்வாள்போல

    ReplyDelete
    Replies
    1. சீனியர் அசத்திட்டீங்க!! செம!!

      Delete
  4. உணர்த்துவோம். இது உறுதி.

    ReplyDelete
  5. யாருக்கும் வெட்கமில்லை ஐயா

    ReplyDelete
  6. அரசியல் என்றால் இப்படித்தானே!

    த ம 4

    ReplyDelete
  7. புரியும்படியான அரசியல் கவிதை.. 6ம் வோட்டுப் போட்டுவிட்டேன்ன் பொய் எனில் கையைப் பாருங்கோ மை இருக்கு.. சத்தியமா உங்களுக்குத்தான் போட்டேன்ன்:).

    ReplyDelete
  8. //ஓட்டுதனைக் கேட்பதற்கு வருவார் அன்றே
    உணர்த்திடுவோம் மறவாது உணர நன்றே//
    சரியாக சொன்னீர்கள் ஐயா! காத்திருப்போம் அந்த நாளுக்கு.

    ReplyDelete
  9. இவர்களின் அடிமைத் தனத்துக்கு 'அனிதா'க்கள் பலி ஆகிறார்கள் :(

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா !

    ஓட்டுதனைக் கேட்கவரும் உதவா தோற்கும்
    ...ஒருநொடியில் ஆராத்தி எடுக்கும் கூட்டம்
    நாட்டினிலே இருப்பதனால் நலமிங்(கு)இல்லை
    ...நம்மவரை நம்புங்கால் உயர்வும் இல்லை
    பட்டினியாய்க் கிடந்தாலும் பண்டு தொட்டுப்
    ...பச்சோந்திப் பழக்கத்தை விடாதோர் ! எம்மை
    முட்டவரும் முன்னகல்தல் முறையே ஐயா
    ...முடிவில்லை இவர்க்கெல்லாம் மூளைச் சாவே !

    நல்லா சொன்னீர்கள் ஐயா நானும் வந்ததைக் கொட்டிவிட்டேன் நன்றி
    தம +1

    ReplyDelete