உறவுகளே
துடப்பக் கட்டைக்கும் விளம்பரம் செய்யும் அளவிற்கு
நம் நாடு முன்னேறியுள்து ! பார்த்தீர்களா! மாண்பு மிகு
பிரதமர் அவர்களின் தூய்மை இந்தியா திட்டம் இனி
வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை
மத்திய ,மாநில அரசுகள் தாம்
கொண்டு வரும் திட்டங்கள் செயல் படுதா என்பதைக் கவனிக்காமல் மேன்மேலும் திட்டங்களை அறிவிப்பதால் என்ன பயன் ? அறிவித்த திட்டங்களை
செயல்படுத்த வழிகளை ஆய்ந்து நடைமுறை படுத்தஆவனl
செய்வது அரசின் கடமையாகும் படிப்பறிவு குறைந்த
பாமர மக்கள் அதனை அறிந்து கடை பிடிக்க அரசுதான்
முயல வேண்டும்
மூட நம்பிக்கையை ஒழிக்கத்தான் கர்நாடகச் சட்டசபை சட்டம் போட்டது, ஆனால்அதற்காவே இங்குதோன்றிய ,தந்தை பெரியார் ,அண்ணா வழிவந்த திராவிட இயக்கதில் முக்கிய தலைவர்களான மாறன்
சகோதரர்கள் நடத்தும் சன் டிவியோ நாள்முழுதும் ஒளிபரப்பும் தன சீரியல்கள் மூலம் மூடநம்பிக்கையை
வளர்த்துக் கொண்டிருப்பது முறைதானா?? இதனைத்
தடுக்க வேண்டிய கடமை செயல் தலைவர்,தளபதி அவரகளுக்கு உண்டல்லவா! செய்வாரா?
உறவுகளே
நாம் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை!
நாங்கள் பொய்தான் சொன்னோம் மன்னித்து விடுங்கள் என்று பொதுக்கூட்ட மேடையில் கொஞ்சமும் கூசாமல் கூறுகின்ற அமைச்சர்கள்
ஆட்சி இங்கே நடக்கிறது!இதைவிட கேவலம் வேறு
உண்டா? இனி இறைவன்தான் நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்
புலவர் சா இராமாநுசம்
மக்கள் சரியான சிந்தனைக்கு வராதவரை இன்னும் கூத்துகள் நடக்கும் ஐயா.
ReplyDeleteத.ம.பிறகு கணினி வழியே...
த.ம.4
Delete# திட்டங்கள் செயல் படுதா என்பதைக் கவனிக்காமல் #
ReplyDeleteஇப்படித்தான் அய்யா ,அந்த அம்மா இருந்தவரை 210 விதியின் கீழ் தினம் தினம் ஒரு திட்டத்தை அறிவித்துக் கொண்டே இருந்தார் ,அருகில் இருந்தவர்களின் திட்டத்தை அறியாமல் :)
ப்ரூம்ஸ்டிக் விளம்பரம் வந்து ரொம்ப நாளாச்சேப்பா
ReplyDeleteமக்களுக்கு விழிப்புணர்வும் கொஞ்ச நாட்கள்தான்! அப்புறம் அடுத்த விஷயத்துக்கு போய்விடுவார்கள்! தம மூன்றாம் வாக்கு.
ReplyDeleteதம மூன்றாம் வாக்கு what is this?
ReplyDeleteஒரு நாள் போராட்டம் அப்புறம் எல்லாம் பழகிவிடும்...அவ்வளவுதான் ஐயா..மக்களுக்கு விழிப்புணர்வு வந்தாலொழிய எதுவும் மாறப் போவதில்லை
ReplyDeleteத ம 5
வணக்கம் புலவர் ஐயா !
ReplyDeleteநல்ல கேள்வியோடு அமைந்த பதிவில் தாங்களும் திமுக
ஆதரவாளன் என்று சொல்லாமல் சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா சமத்து .....
தற்போதைய அரசுக்கு பதவி தேவை மக்களுக்குப் பணம் தேவை அவரவருக்கு அவரவர் தேவை மட்டுமே இப்போதைக்கு முக்கியம்