மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மாறினாலும் இதுவரையில் மாறாத் தொல்லை
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம் –மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம்
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கே –எடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்க
நேற்றுவரை முன்னிருந்தார் போன வழியே – ஐயா
நீங்களுமே.! போவதென்ன!? வருதல் பழியே
புலவர் சா இராமாநுசம்
அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குட்டை, ஒரே மட்டை.
ReplyDeleteதம முதலாம் வாக்கு.
இவர்களின் கொள்ளைக்கு ஒரு உதாரணம் ,பெட்ரோல் தினசரி விலையேற்றம் :)
ReplyDeleteதவறுகளின் தொடக்கம் மக்களிடமே ஐயா...
ReplyDeleteமாற்றம் என்ன வேண்டும் என்றும் எடுத்துரைத்தல் நன்று - அவை
ReplyDeleteபோற்றும்படி அமைந்துவிட்டால் பிறக்கும் விடிவு இன்று.
கோ
எல்லாம் குட்டையில் ஊறிய மட்டைகள்தான் ஐயா!! தமிழ்நாட்டின் போக்கும் சரியில்லை...
ReplyDeleteதம 3
சிஸ்டம் சரியில்ல
ReplyDeleteவணக்கம் புலவர் ஐயா !
ReplyDeleteஅரசியலில் இதுவொன்றும் புதிது இல்லையே ....
தம +1
உண்மைஐயா
ReplyDeleteதம +1
மாற மாட்டார்கள்.
ReplyDeleteஅட்டமத்துச் சனி என்னுடையது:) ஹா ஹா ஹா 8ம் நம்பர்:).
ReplyDeleteசிஸ்டத்தை மாற்றுவதுதான் ஒரே வழி!
ReplyDelete