Wednesday, September 20, 2017

போதுமென்ற மனம் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே?



போதுமென்ற மனம் கொண்டே
     புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
    எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
     தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
    சொல்லில் இன்றைய மனிதநிலை!

மாறிப் போனது மனிதமனம்
     மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
    உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
    பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
    இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
    ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
    வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
     குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
     பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
     சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
     முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
   காண்பதே இன்றைய மனிதநிலை!

                        புலவர் சா இராமாநுசம்

12 comments:

  1. நிகழ்காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி உங்கள் கவிதை.

    கோ

    ReplyDelete
  2. சுயநல உலகம். கலிகாலம்.

    தம முதலாம் வாக்கு.

    ReplyDelete
  3. என் பதிவுக்கு கூட, தமிழ்மணத் திரட்டியில் மைனஸ் வாக்கு போட்டு தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் பிறவிகள் இருக்கிறார்களே ,தங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அய்யா :(

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா என்னது மைனஸ் வாக்குக் கூட போட்டு இருக்காங்களா அட பாவிகளா ,,,,,கண்டுபிடிங்க ஜி கட்டித் தொங்க விடுவோம்

      Delete
  4. நிகழ்கால நிதர்சனம் வரிகளில் அருமை ஐயா..

    தம 3

    ReplyDelete
  5. அருமையாக விளக்கினீர்கள் ஐயா இன்றைய அவலநிலை
    த.ம.4

    ReplyDelete
  6. இன்றைய நிலையை விளக்கியிருக்கும் விதம் அருமை.. தமனாவுக்கு 5 வயசாக்கியது நாந்தேன்ன்:).

    ReplyDelete
  7. புலம்பதான் முடியும். வேறென்ன செய்யமுடியும்?!

    ReplyDelete
  8. நான் இங்க வந்துட்டேன். வரலைன்னு சொல்லக்கூடாது

    ReplyDelete
  9. வணக்கம் புலவர் ஐயா !

    இன்றைய மனிதம் தன்னை
    எழுதிய கவியில் ஆழ்ந்தேன் ........

    அருமை ஐயா மனிதமாவது மாறுவதாவது ம்ஹூம்......

    தங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது நன்றி

    ReplyDelete
  10. பலரும் இம்மாதிரி எதிர்மறையான சிந்தனைகளை விரும்புவதில்லை என்றே நினைக்கிறேன் ஆனால் என்ன செய்ய நடைமுறையைத்தானே எழுத முடியு ம்

    ReplyDelete