நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-நாளும்
நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றோ
வீதியிலே இறங்கிவர இயலா ரென்றே-இந்த
வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர் நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பார்ப்பீரய்யா-அந்த
பாவிகளின் துயரத்தைத் தீர்ப்பீரய்யா
நீதிக்கும் குரல்கொடுக்க துணிய மாட்டார்-இரவு
நிம்மதியும் இல்லாமல் உறங்க மாட்டார்!
பணக்காரர் இதுபற்றி கவலை கொள்ளார்-இங்கே
ஏழைக்கோ ! இலவசம்! தொல்லை யில்லார்
கணக்காக செலவுதனை திட்ட மிட்டும்-மாதக்
கடைசியிலே கடன்வாங்கித் துயரப் பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப் பலரும்-வாழும்
பேதைகளாம் நடுத்தரமே! பொழுதா புலரும்!?
குணமென்னும் குன்றேறி நின்றா ரவரே!-அவர்
கொதித்தாலே எதிர்வந்து நிற்பா ரெவரே!
புலவர் சா இராமாநுசம்
அறச்சீற்றம் அருமை ஐயா
ReplyDeleteத.ம.பிறகு.
த.ம.6
Deleteஉண்மைதான் ,நடுத்தரம் கொந்தளித்தால் நாடு தாங்காது அய்யா :)
ReplyDeleteஇந்த முறையீட்டை யார் காதில் வாங்குகிறார்? தம இரண்டாம் வாக்கு.
ReplyDeleteவிரைவில் கொந்தளிப்பு ஏற்படும் ஐயா
ReplyDeleteஅருமை
தம +1
அந்த நாள் வெகு விரைவில்!
Deleteவெகு விரைவில் காட்சி மாறும்ன்னு நினைக்கிறேன்ப்பா
ReplyDeleteசொல்லி மாளாது ஐயா.
ReplyDeleteஅவர் கொதித்தால் எதிர் வந்து நிற்பவர் எவரும் இல்லை என்பது உண்மைதான் ஐயா.
ReplyDelete