Tuesday, September 12, 2017

மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே!


மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே
நிலமடந்தை நீள்வயிற்றில் நீயுதித்தாய் ஆனாலும்
பலரகத்தில் பாரினிலே பரவிநீ பூத்தாலும்
சிலரகத்தில் மட்டுமந்த சிறப்பான மணமேனோ?

புலவர் சா இராமாநுசம்

5 comments:

  1. கூந்தல் தரும் மணமோ? அல்லது மயங்கிய மனம் தரும் மணமோ!

    முதலாம் வாக்கு.

    ReplyDelete
  2. பட்டிமன்றம் வச்சுடலாமாப்பா?!

    ReplyDelete
  3. மலர்களின் இந்த ஓர வஞ்சனையை கடுமையாய் கண்டிக்க வேண்டும் அய்யா :)

    ReplyDelete
  4. அருமை...
    பட்டிமன்றம் வச்சாலும் பதில் கிடைக்காதே...

    ReplyDelete
  5. மலர்கள் எல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல என நினைக்கிறேன் ஐயா! காரணம் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள் ஒன்றுபோல் இருப்பதில்லையே!

    ReplyDelete