இனிய உறவுகளே !
இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும்
இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே!
நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ! –இவன்
நான்பெற்ற இளையமகள் பெற்ற சேயே!
அன்றெந்தன், துணைவியவள் விட்டுச் சென்றாள்-பெற்ற
அன்னையென அன்புதர மகளே ! நின்றாள்
ஒன்றென்ன பெற்றமகன் வாழ்க என்றே- வலை
உறவுகளே! வாழ்த்துங்கள்! இவனை நன்றே
உலகத்தில் ,உத்தமனாய் அவன்வாழ வேண்டும்! –கண்டே,
உள்ளத்தில் உவகைமிக உருவாக யாண்டும்!
திலகமென , படிப்போடு , பண்பாடும் கற்றே-பலரும்
தெரிவிக்கும் பாராட்டே, பட்டமென பெற்றே,
அன்புமிக அடக்கமொடு வளர்ந்திடவே, வாழ்த்தி!-வலை
அன்பர்களே! கரம்கூப்பி சிரம்தன்னைத் தாழ்த்தி
இன்புமிக உறவுகளே! நான்வேண்டு கின்றேன்!-என்றும்
இதயத்தில் வாழ்வோரே உமைத்தூண்டு கின்றேன்!
நன்றி! வணக்கம்!
புலவர் சா இராமாநுச
தங்களது பெயரன் பல்லாண்டு வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteத.ம.பிறகு
த.ம.2
Deleteமிக்க நன்றி
Deleteஇனிய வாழ்த்துகள், ஐயா...
ReplyDeleteஉங்கள் பேரனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதம முதலாம் வாக்கு.
மிக்க நன்றி
Deleteஆண்டு நிறைந்தது அருமைப் பேரனுக்கு
ReplyDeleteஅவனும்
ஆலெனப் படர்ந்து அருகென வேரூன்றி
பல்கிப் பெறுகி பல்லாண்டு வாழ்ந்திட
எல்லாம் வல்ல இறைவன் அருள்கவே!
மிக்க நன்றி
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி
Deleteதங்களின் அன்புப் பெயரனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteதம +1
மிக்க நன்றி
Deleteதங்களின் பேர்னுக்கு என் வாழ்த்துகள். தங்களின் கவிதைக்கு என் பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteபேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அவருக்காக இன்று என் அஞ்சாவது வோட் விழுந்திருக்கு.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஐயாவின் பேரனுக்கென் ஆசிகள்கோடி- நீண்ட
ReplyDeleteஆயுளுடன் வாழ்ந்திடுக புகழும்தேடி
உய்வாரே உம்தமிழை தினமும் கேட்டே-அவர்
உங்களைப்போல் புனைந்திடுவார் தமிழில் பாட்டே
சேட்டையவர் வாழ்த்துதனை செப்பி விட்டார்
Deleteசெந்தமிழால் ஆசிகூறி நெஞ்சைத் தொட்டார்
கோட்டதனைப் பிடித்துவிட்ட கோமான் போன்றே
கொண்டேனே இன்பமதில் மிதக்க இன்றே
பேரனுக்கு இனிய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ReplyDeleteதங்கள் பேரனுக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteவாழட்டும் தலைமுறை வாழ்க வளத்துடன் !
வண்ணமெலாம் கொண்டிலங்கும் சந்த திக்குள்
வாழ்வாங்கு வாழ்ந்திடுவான் உங்கள் பேரன்
எண்ணமெலாம் இனிப்பாகும் இறையன் பைப்போல்
இருக்குமிடம் செழித்திருக்க வைப்பான் வீரன்
திண்ணமெலாம் திருமொழிபோல் திகட்டத் தந்தே
தேவர்குலம் போல்பெருமை கொள்வான் இங்கே
பண்ணுதமிழ் பாவலரே உங்க ளைப்போல்
பாரெல்லாம் நிறைந்திருப்பான் பாடும் சங்கே !
கற்றவரும் கைகூப்பி வணங்கும் வண்ணம்
கல்வியிலே சிறந்திடுவான் காலம் யாவும்
பெற்றவரும் மகிழ்வுகொளப் பிரியம் தந்தே
பிறருக்கும் வாழ்வளிப்பான் பேரண் டத்தில்
உற்றவரும் ஒவ்வொன்றாய் உயர்வு கொள்ள
உறுதுணையாய் வாழ்ந்திருப்பான் உள்ளம் மேவும்
பொற்புடைய பொதுமறைபோல் பொய்யா தாகிப்
புகழெல்லாம் பெற்றிடுவான் பாரீர் பாரீர் !
கட்டழகு வாலிபனாய்க் காலம் யாவும்
கல்விநிறை செல்வமுடன் காதல் செய்தே
பட்டழகுப் பைந்தொடியாள் மணாளன் ஆகிப்
பண்புநிறை செல்வங்கள் இவனும் பெற்றே
தொட்டழகு பார்த்திருப்பான் தூயோன் உம்மில்
துள்ளிவிளை யாடவைப்பான் ! தொட்டில் தன்னில்
மொட்டழகுச் செவ்விதழால் முத்தம் கேட்டே
முத்தமிழில் பாடென்பான் பாரும் அன்றே !
வாழ்க நலம் !
தம +1
சீராள சொற்களிலே வாழ்த்தும் கூறி
Deleteசிந்தியநல் கவிகண்டு மகழ்வில் ஊறி
சீராளா செந்தமிழ்தேன் நானும் உண்டேன்
சீரான நாலுவரி நன்றி! விண்டேன்
பேரனுக்கு வாழ்த்துக்கள். அவன் சார்பாக தாத்தாவுக்கு நன்றிகள்.
ReplyDeleteஎங்களது வாழ்த்துகளும் புலவர் ஐயா.
ReplyDeleteபேரனார் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
ReplyDeleteதங்களது பேரனுக்கு எனது வாழ்த்துகள் ஐயா!
ReplyDelete