இறைவா எங்கே இருக் கின்ராய்-வீணில்
ஏனோ எம்மை வதைக்கின்ராய்
மறைவாய் அவரும் இருந்து கொண்டே-குறைமிகு
மாண்பிலா இருவர்தமை விண்டே
திரையார் பொம்மையின் ஆட்ட மென்றே-இங்கே
தினமே ஆளும் அரசுமொன்றே
விரைவாய் நீங்கிட கருணை வைத்து-காணும்
வேதனைப் போக்கிட வருவாயா
புலவர் சா இராமாநுசம்
உங்களின் ஆதங்கம் தீரும் நாள் வெகு தொலைவில் இல்லை அய்யா :)
ReplyDeleteமாற்றம் வருமென்று நம்புவோம் ஐயா
ReplyDeleteத.ம.1
முதல் வரியிலும் கடசி வரியிலும் எழுத்துப் பிழை இருக்கிறதுபோல தெரியுது...
ReplyDeleteஇறைவன் வதைக்கிறாரா.. நம்மை நாமே வதைக்கிறோமா என சில நேரங்களில் குழம்ப வைக்கிறதே..
நன்றி ஆதிரா சுட்டிக் காட்டியதற்கு
Deleteபிழைத்திருத்தம் இன்னும் செய்யப்படவில்லை!
ReplyDelete:))))
மூன்றாம் வாக்கு.
நம்புவோம் புலவர் ஐயா.
ReplyDeleteபிழை இன்னும் திருத்தவில்லையோ ஐயா...
த ம 4
திறமை சற்றும் இல்லாமல்-சொல்
ReplyDeleteதிண்மை கொண்டும் வெல்லாமல்
அறமேவிற்று ஆள்வோராம்- புல்
அம்பே பட்டால் மாள்வோராம்
உறவார் வாழ ஊர்மாய்த்தே-தான்
உழலுகிறாரே பொன்சேர்த்தே
பிறரைச் சொல்லிப் பயனுண்டோ?-இப்
பித்தம் தீரும் வழியுண்டோ?
பாட்டால் கருத்தை தந்தீரே-நானும்
Deleteபயன்பெற ஊக்கமாய் வந்தீரே
கேட்டார் பிணிக்கும் உம்கவிதை
கேளாக் காதும் கேட்குமிதை