Wednesday, August 30, 2017

இறைவா எங்கே இருக் கின்ராய்-வீணில் ஏனோ எம்மை வதைக்கின்ராய்




இறைவா எங்கே இருக் கின்ராய்-வீணில்
ஏனோ எம்மை வதைக்கின்ராய்
மறைவாய் அவரும் இருந்து கொண்டே-குறைமிகு
மாண்பிலா இருவர்தமை விண்டே
திரையார் பொம்மையின் ஆட்ட மென்றே-இங்கே
தினமே ஆளும் அரசுமொன்றே
விரைவாய் நீங்கிட கருணை  வைத்து-காணும்
வேதனைப் போக்கிட வருவாயா


புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. உங்களின் ஆதங்கம் தீரும் நாள் வெகு தொலைவில் இல்லை அய்யா :)

    ReplyDelete
  2. மாற்றம் வருமென்று நம்புவோம் ஐயா
    த.ம.1

    ReplyDelete
  3. முதல் வரியிலும் கடசி வரியிலும் எழுத்துப் பிழை இருக்கிறதுபோல தெரியுது...

    இறைவன் வதைக்கிறாரா.. நம்மை நாமே வதைக்கிறோமா என சில நேரங்களில் குழம்ப வைக்கிறதே..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதிரா சுட்டிக் காட்டியதற்கு

      Delete
  4. பிழைத்திருத்தம் இன்னும் செய்யப்படவில்லை!

    :))))

    மூன்றாம் வாக்கு.

    ReplyDelete
  5. நம்புவோம் புலவர் ஐயா.

    பிழை இன்னும் திருத்தவில்லையோ ஐயா...

    த ம 4

    ReplyDelete
  6. திறமை சற்றும் இல்லாமல்-சொல்
    திண்மை கொண்டும் வெல்லாமல்
    அறமேவிற்று ஆள்வோராம்- புல்
    அம்பே பட்டால் மாள்வோராம்
    உறவார் வாழ ஊர்மாய்த்தே-தான்
    உழலுகிறாரே பொன்சேர்த்தே
    பிறரைச் சொல்லிப் பயனுண்டோ?-இப்
    பித்தம் தீரும் வழியுண்டோ?

    ReplyDelete
    Replies
    1. பாட்டால் கருத்தை தந்தீரே-நானும்
      பயன்பெற ஊக்கமாய் வந்தீரே
      கேட்டார் பிணிக்கும் உம்கவிதை
      கேளாக் காதும் கேட்குமிதை

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...