Thursday, August 24, 2017

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து நாளும் மக்கள் அதைப்பேசி




நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!


புலவர் சா இராமாநுசம்

14 comments :

  1. விலைவாசி ஏற்றம் நஞ்சாகி
    விளகின்ற பொருளெலாம் பஞ்சாகி
    எங்கோ பறந்து கிடக்கின்றோம்.
    துன்பம் அதனை பாட்டாக்கி
    துயர் துடைக்க வழி சொன்னீர்
    நன்று! நன்று! மிக நன்று! வெறும்
    சொற்களின் தோட்டம் அல்ல‌ இது.
    சீறும் தோட்டா சிந்தனையாய்
    நாறும் அமைப்பினை ஒழித்திடவே
    பாயட்டும் உங்கள் புயற்கருத்து!

    அன்புடன் ருத்ரா

    ReplyDelete
    Replies
    1. முதல் முறை வந்தீர் வாழ்திடவே-கடல்
      முத்தென பகிழ்வில் ஆழ்த்திடவே
      சதமிது என்றே கவிபடைத்தீர்-நானும்
      சாற்றினேன் நன்றி வணக்கமென
      இதைவிட பேறு வேறில்லை-கொண்ட
      இனிமைக்கு இன்று ஏதெல்லை!

      Delete
  2. ஏறின விலை இறங்கினதா சரித்திரம் பூலோகம் இல்லப்பா

    ReplyDelete
    Replies
    1. மகளே ராஜி உன்னுடைய வலையைத் தட்டினால் என் கணினியில் நான்கைந்து பதிவுகளாக ஏதோ ஒரு வலையின் பெயர்வந்து அதும் சுற்றிக் கொண்டே இருக்கிறது !முன்பும் குறிப்பிட்டேன் கவனிக்க வில்லையே

      Delete
  3. வேதனைதான்.

    முதலாம் வாக்கு.

    ReplyDelete
  4. எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் ஐயா...

    ReplyDelete
  5. விவாசி குறைப்பு இனி சாத்தியமா ?
    என்பதே எனது கேள்வி ஐயா
    த.ம.4

    ReplyDelete
  6. விலைவாசிக்குக் காரணம் டிமாண்ட் அண்ட் சப்ளை என்றல்லவா நினைத்திருந்தேன்

    ReplyDelete
  7. விலை வாசி குறையுமா
    தலைகள் தான் சரியுமோ

    தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

    ReplyDelete
  8. விலைவாசியாவது குறைவதாவது!

    ReplyDelete
  9. ஒவ்வொரு MLA விலை பல கோடியாக உயர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விலைவாசி எப்படி அய்யா குறையும் :)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...