இனியது கேட்பின் எனதரும் உறவே
இனிது இனிது இல்லற வாழ்வே
ஈட்டிய பொருளும் இணையில் மனைவியும்
வீட்டுடன் வசதியாய் அமைந்திடு மானால்
இனிது இனிது இல்லற வாழ்வ
இல்லற இல்லது நல்லறம் இல்லை
இணையில் வள்ளுவர் இயம்பிய வழியில்
மக்கள் செல்வம் ஆணென பெண்ணென
இரண்லடே போதும் இனிதென ஓதும்
இப்பெரு உலகில் இனியதே யாதும்
ஓப்பிலா என்றே செப்பிடல் ஒன்றே
இனிது இனிது இல்லற வாழ்வே!\\
புலவர் சா இராமாநுசம்
இனிய இல்லறத்துக்கு இரண்டே போதும்தான் அய்யா :)
ReplyDeleteத ம 1
நன்றி!
Deleteரொம்ப ரசித்த கவிதை புலவர் ஐயா. த ம 2. இந்தக் கவிதை ஓரிரு கவிதைகளை (சங்க) நினைவுபடுத்துகிறது. (ஔவையின் தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள். இனியது கேட்கின், அரியது கேட்கின், பெரியது கேட்கின் போன்ற)
ReplyDeleteஇல்லற இல்லது நல்லறம் இல்லை - "இல்லறமல்லது நல்லற மன்று" நினைவுபடுத்துகிறது. அதனால்தான் 'இல்லது' என்று போட்டீர்களோ?
இரண்லடே - இரண்டே
"ஓப்பிலா என்றே செப்பிடல் ஒன்றே" - இதுல "செப்பிடல் நன்றே" என்று வந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமா?
நன்றி!
Deleteஅருமை ஐயா அழகிய வரிகள் நன்று
ReplyDeleteத.ம.3
நன்றி!
Deleteஆண்டு அனுபவித்தவர் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
ReplyDeleteஅருமை ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteநன்று.
ReplyDeleteநன்றி!
Deleteஅருமை ஐயா.
ReplyDeleteநன்றி!
Deleteபதிவும் இனிது ஐயா. ஐந்தாவது வாக்கு.
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா!
ReplyDeleteதம 6
நன்றி!
Deleteஇல்லற வாழ்வே இனிது
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா
நன்றி
தம +1
நன்றி!
Deleteஇனிது கவிதை அருமை.
ReplyDeleteநன்றி!
Delete