உண்ணுகின்ற உணவுதனை தந்தோ னின்றே – நஞ்சு
உண்ணுகின்றான் சாவதற்கே கொடுமை யன்றே!
எண்ணுதற்கே இயலாத துயரந் தானே –அதை
எண்ணுகின்ற அரசுகளும் இல்லை வீணே!
பாடுபட்டு இட்டபயிர் கருகிப் போக – தீயும்
பற்றிவிட வயிரெரிந்து உருகிச் சாக
மாடுவிட்டு மேய்க்கின்ற காட்சி காண்பீர்– நல்
மனங்கொண்டார் அனைவருமே கண்ணீர் பூண்பீர்!
இட்டபயிர் இட்டவனே அழிக்கும் நிலையே –இன்று
இருக்கிறது தமிழ்நாட்டின் வறட்சி நிலையே!
திட்டமில்லை தீர்பதற்கும் முயற்சி இலையே – உழவன்
தேம்பியழின் வைப்போமா அடுப்பில் உலையே!
!கத்திதினம் கதறியழும் மக்கள் ஓய –கேளாக்
காதெனவே சங்கொலியும் சென்றுப் பாய,
சித்தமது கலங்கியவர் செய்வ தறியார் –கல்லில்
செதுக்கியதோர் சிலையென ஆளும் உரியார்!
பஞ்சமிக பசியும்மிக வாட்டும் போதே –இன்று
பதவிசுகம் காண்பார்கள் உணர்வார் தீதே!
கொஞ்சமேனும் அக்கறையே எடுப்பார் இல்லை –பல்வேறு
கட்சிகளும் இருந்துபயன்!? ஒற்றுமை இல்லை!
நாதியற்றுப் போனாரே உழைக்கும் மக்கள் –வாழும்
நம்பிக்கை ஏதுமின்றி ஏழை மக்கள்
வீதிவலம், போராட்டம் நடத்து கின்றார் –மேலும்
வேற்றுமையில் ஒற்றுமை இதுவா ? என்றார்!
புலவர் சா இராமாநுசம்
வறட்சி என்பது இயற்கை என்றாலும் மனிதர்களும் அதற்கு ஒரு காரணம். சுயநலத்தின் விளைவு. மழையில்லாது ஆகிப் போனது. மழை பெய்தால் அதைத் தேக்கி வைத்து வறட்சி சமயத்தில் பயன்படுத்தும் நல்ல திட்டங்களும் தீட்டாத அரசு, மக்கள்...
ReplyDeleteமழை பெய்தால் நல்லது..
தம 1
வேதனையை உணர்த்திய கவிதை
ReplyDeleteத.ம.பிறகு
த.ம. 5
Deleteவேதனைப்பா
ReplyDeleteதம 2
மூன்றாம் வாக்கு.
ReplyDeleteதுயரம்தான்.
ReplyDeleteவேதனை ஐயா
ReplyDeleteதம +1
வருந்தும் வறியவரின் வேதனைக்கு வரி தந்தீர் ஐயா !
ReplyDeleteவேதனை தரும் நிகழ்வுகள்....
ReplyDeleteத.ம. ஆறாம் வாக்கு.