Friday, August 11, 2017

வாசலுக்கு நீர்தெளித்தல் போல நாளும்-ஏனோ வந்துவந்து போகின்ற மழையே !



வாசலுக்கு நீர்தெளித்தல் போல நாளும்-ஏனோ
வந்துவந்து போகின்ற மழையே !மேலும்
பூசலுக்கும் ஆளாகி பதவி வெறியில்-ஆள்வோர்
போடுகின்ற போட்டிமிக ,அந்தோ நெறியில்
பேசலுக்கு ஏதுமில்லை பதறும் நெஞ்சம்-நாங்கள்
பிழைக்கவழி காட்டுவாயா மழையே தஞ்சம்
நாசமிக ஆவதற்குள் திரண்டு வருவாய்-என்றே
நம்புகின்றோம் மாமழையை விரைவில் தருவாய்!!


புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. மழை வருமென நம்புவோம் ஐயா
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. மழை... எப்போதும் தேவை....

    த.ம. முதலாம் வாக்கு.

    ReplyDelete
  3. வாசலுக்கு நீர் தெளித்த மாதிரிதான் மழை பெய்யனும்ப்பா. அப்பதான் நிலத்துல நீர் ஊறும். இல்லன்னா அடிச்சிக்கிட்டு போய்டும்

    ReplyDelete
  4. ஆமாம் வாசலுக்கு நீர் தெளித்தது போலத்தான் பெய்யுது. சூட்டையும் கிளப்பிவிட்டுச் செல்கிறது. மழை வேண்டும் எனப் பிரார்த்திப்போம்...

    தம 5

    ReplyDelete
  5. உங்களின கோரிக்கை நேற்று முதலே நிறைவேறத் தொடங்கிவிட்டது ,நேற்று மாலை இங்கே நல்ல மழை :)

    ReplyDelete
  6. ஏழாம் வாக்கு.

    இருட்டிக் கொண்டு வருகிறதே தவிர அந்த அளவு மழை வருவதில்லை.

    ReplyDelete
  7. மழை பொழியட்டும் ஐயா
    அருமை
    தம +1

    ReplyDelete
  8. நேற்று உங்கள் கவிதையால் நல்ல மழையை கொடுத்து விட்டார் போலவே! வருண பகவான்.

    ReplyDelete
  9. தானமொடு தவமெதுவும் தங்காதன்றோ-மாரி
    தக்கபடி பெய்யாமல் வாழ்வும் உண்டோ?
    மானமுள்ள மாந்தரிங்கு உண்டேயென்றால்- நித்தம்
    மரக்குரங்குபோல் தாவும் அவலம் உண்டோ?
    கானமதில் வாழ்ந்துலவும் மிருகம்கூட-கண்ணில்
    காண்பதனைப் பசியின்றிக் கொல்வதுமுண்டோ?
    ஈனமுடன் வாழ்வதையே பெருமையென்றே-எண்ணும்
    இழிந்தோரை நோவதனால் பயனுமுண்டோ?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...