Tuesday, August 1, 2017

பெரியது கேட்பின் எனதரும் உறவே!




பெரியது கேட்பின் எனதரும் உறவே
பெரிது பெரிது பெரியோர் துணையே
அதனினும் பெரிது அவர்வழி நடத்தல்
அறம்வழி வாழ்ந்து மறம்தனை தவிர்த்தல்
அதனினும் பெரிதென அறிவது நன்றே
பெண்மையைப் போற்றி உண்மையே சாற்றி
பூண்பதே இன்பம் போய்விடத் துன்பம்
காண்பதே பெரிதெனக் கவிதையை முடித்தேன்


புலவர் சா இராமாநுசம்

10 comments:





  1. வாழும் கலை சொல்லும் அருமையாக கவிதை அய்யா !

    த ம வாக்கு போட்டால் 'மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது'என்றே வருகிறது ,பொறுத்திருந்து பார்க்கணும் அய்யா ,வாக்கு சேர்கிறதா என்று !

    ReplyDelete
  2. அருமை ஐயா இரசித்தேன்
    த.ம.பிறகு.

    ReplyDelete
  3. பெண்மையை போற்றி...

    போற்றினா சரி.

    த.ம/1

    ReplyDelete
  4. அருமை ஐயா! ரசித்தோம்!

    தம 5

    ReplyDelete
  5. அருமை என்று கூறி ரசித்து 8 வது வாக்கை அளித்துச் செல்கிறேன்!

    ReplyDelete
  6. பெரியது கேட்பின் எனதரும் உறவே
    பெரிது பெரிது பெரியோர் துணையே
    அதனினும் பெரிது அவர்வழி நடத்தல்//

    உண்மையான வார்த்தைகள். பெரியோர் வழி நடந்தால் துன்பம் இல்லை.

    ReplyDelete