நிம்மதி நிம்மதி நிம்மதியே-நீயும்
நிலையென இருப்பது எவ்விடமே
எம்மதி
கலங்கிப் புலம்பிடவே-வரும்
எண்ணங்கள் அறியா! கலங்கிடவே
தம்மதி இழந்தவர் பலபேரே-தேடியே
தவித்துமே
அலுத்தவர் சிலபேரே
சம்மதம்
இதவென சொல்லிவிடு-உனக்கு
சரியெனப் பட்டால் சாகவிடு
உனக்கே
நிம்மதி இல்லையோ-ஐயம்
உதிக்கிது என்னுள் !போக்கிடுவாய்
தனக்கு மிஞ்சினால் தானமென-செல்லும்
தத்துவம் தன்னை நோக்கிடுவாய்
ஆண்டவர் மனதிலும்
நீயில்லை-இன்று
ஆள்வோர்
மனதிலும் நீயில்லை
தாண்டவம்
ஆடிடும் நிம்மதியே-இதுவே
தவறென பாடுது என்மதியே!
புலவர் சா இராமாநுசம்
மன உலைச்சலை அழகாக கவிதை ஆக்கினீர்கள் ஐயா விரைவில் சரியாகும்.
ReplyDeleteநிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் என்பது சாத்தியமாவது சிரமம்தான் அய்யா :)
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமனதில் அமைதி நிலவட்டும் ஐயா.
ReplyDeleteநமக்குள்ளேயே இருக்கும் நிம்மதியை மீட்டெடுப்போம்.
ReplyDeleteஅனைத்தும் நமக்குள்ளே...
ReplyDeleteஎங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
ReplyDelete