Tuesday, July 4, 2017

வலையில் எழுதியே வளர்ந்தோமே !–அதை வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!




வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே,
வாராக் காரணம் தெரியவில்லை!-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்!- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்!- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல!-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல!-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே !–அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!




நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல!-முகநூல்
சென்றது  ஏதும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல!-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! வந்திடல், மிகமாட்சி!

புலவர் சா இராமாநுசம்

23 comments:

  1. அருமை ஐயா தங்களது வோண்டுகோள் நிறைவேறும் பழைய நிலைக்கு அனைவரும் வருவர்....
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  2. பிள்ளைகள் வந்ததும் வீட்டுக்காரரை கவனிப்பது குறைந்த மாதிரி ஃபேஸ்புக், ட்விட்டர்லாம் வந்து பிளாக்கை கவனிக்க முடியாம போச்சு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  3. பலருக்கும் வலைத்தளத்தின் மகத்துவம் புரியவில்லை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  4. ஒரு சிலர் இப்போதே வந்து விட்டார்கள் அய்யா :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  5. வலை மீது உங்களுக்குஇருக்கும் நேசம்புரிகிறது இந்தநேசம் பதிவர்களுக்கும் இருந்தால்......

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  6. வணக்கம் அய்யா ..விடுமுறையில் உறவுகளுடன் இருந்ததால் வர முடியவில்லை இனி தொடர்வேன் அய்யா ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  7. வலையுலகின் மீதும், வலைப்பதிவர்கள் மீதும், புலவர் அய்யா வைத்து இருக்கும் அளவற்ற அன்பு எல்லோரும் அறிந்த ஒன்று. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்களில் இடம் பெற்று இருந்தாலும், நான் முதலிடம் தருவது வலைத்தளத்திற்கு மட்டுமே.

    கடந்து மூன்றரை மாத காலமாக, எனது தந்தையின்(92) உடல்நிலையை முன்னிட்டு, அவர் அருகிலேயே இருந்து கவனித்து வருவதால், முன்புபோல் என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. எனினும் அவ்வப்போது ஒன்றிரண்டு பதிவுகளை எழுத முடிகிறது.

    புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பிற்கு பிறகு வேறு எந்த சந்திப்பும் பெரிதாக நடந்த மாதிரி தெரியவில்லை. எனவே ஒரு வலைப்பதிவர் மாநாடு நடந்தால் எல்லாம் சரியாகி விடும். மீண்டும் வலையுலகம் கலகலக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  8. வலையுலகம் மீண்டெழட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  9. வலையுலகம் என்றும் சுறுசுறுப்புடன் மீண்டும் முன்னர் போல இயங்க வேண்டும் என்பதே என் ஆசையும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  10. தங்கள் எண்ணம் நிறைவேற வேணும்
    தமிழ் பதிவர் உலகம் சிறக்கணும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  11. உண்மைதான் ஐயா
    வலையுலகில் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டேதான் இருக்கிறது
    வலையுலகு மீண்டெழவேண்டும்
    புதுப் பொலிவு பெற வேண்டும் ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  12. வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete