Saturday, July 29, 2017

கொடியது கேட்கின் எனதரும் உறவே கொடிது கொடிது தனிமை கொடிது!





கொடியது கேட்கின் எனதரும் உறவே
கொடிது கொடிது தனிமை கொடிது
அதனினும் கொடிது முதுமையில் தனிமை
அதனினும் கொடிது மனைவியின் பிரிவு
என்நிலை அதுவே எழுதினால் பதிவே
தன்நிலை தவறின் விளைவது எதுவே
கொடியது கேட்கின் எனதரும் உறவே
கொடிது கொடிது தனிமை கொடிது


புலவர் சா இராமாநுசம்

25 comments:

  1. அவ்வை வாக்கின் வழக்கில் சொல்லப்பட்டுள்ள கவியில் உங்கள் நிலை புரிகிறது ஐயா.

    முதலாம் வாக்கு.

    ReplyDelete
  2. உங்கள் நிலை புரிகிறது ஐயா

    ReplyDelete
  3. தங்களது கவிதை என்னையும் கலங்க வைக்கிறது ஐயா
    த.ம.பிறகு

    ReplyDelete
  4. நாங்க இருக்கோம்ப்பா. நிறைய எழுதுங்க

    ReplyDelete
  5. உண்மை தான் ஐயா... இருந்தாலும் நாங்கள் இருக்கிறோம்...

    ReplyDelete
  6. தனிமை கொடிது என்பது உண்மைதான்...உங்கள் நிலை புரிகிறது.. என்றாலும் முடிந்த அளவிற்கு எழுதுங்கள்...வலையுலக மக்கள் நாங்கள் இருக்கிறோம் ஐயா!

    ReplyDelete
  7. தனிமையை நிணைத்து கவலைப்பட்டால் தனிமையைவிட கொடியது...எனது அனுபவம் அய்யா....

    ReplyDelete
  8. இளமையில் தனிமை என்றால் ஒரு முடிவுக்கு வந்து விடும் ,முதுமையில் தனிமை என்றால் கொடுமைதான் அய்யா :(

    ReplyDelete
  9. தனிமை கொஞ்சம் கடினமான விஷயம் தான்.

    த.ம. 10-ஆம் வாக்கு.

    ReplyDelete
  10. தனிமை என்பது மனம் பற்றியது என்று என் பதிவு ஒன்றுக்கு வந்தது ஒரு பின்னூட்டம்

    ReplyDelete