Friday, July 21, 2017

முகநூல் பதிவுகள்!



சில நேரங்ளில் நூலை இயற்றியவரின் கருத்துக்கு உரையாசியர் கருத்துக்கான விளக்கம் நூலுக்கு
மேலும் சிறப்பளிக்கும்
வள்ளுவர் , படிக்காதவன் நுட்பமான கருத்தைக் கூறினாலும் படித்தவர் ஏற்றுக் கொள்ளார் என்பார்
இதற்கு உரையாசிர்(பரிமேலழகர்) கூறும் எடுத்துக் காட்டு ஏரல் எழுத்து போல, அதாவது, கடற்கரையிலகள் நண்டுகள் முன்னும் பின்னும்செல்ல ஏற்படும் வரிகள் உற்று பார்த்தால் அ போலவும் உ போலவும் தெரியும் அதனால் நண்டுகளுக்கு அ எழுத தெரியும் எவரும் சொல்லார்
என்பர்!சரிதானே!

பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பார்கள்! என்றால் பரப்பனஅக்ராகார சிறையில் பாயாதா! வரும் தேர்தலில் கர்நாடக முதல்வருக்கு சிக்கல்தான்

உறவுகளே!
உலகத்தைக் காட்டிலும் மிகவும் பெரியது - எது?
காலமறிந்து செய்த உதவிதான் -அது


அள்ளாம குறையாது இல்லாம வாராது என்பார்கள்
தற்போது பரப்பன அக்காரா சிறை பற்றிய
சின்னமாவின் சொகுசு வாழ்க்கை இரகசியம் அம்பலமாகத் தொடங்கிவிட்டது! விரைவில்
முழுதும் அம்பலமாகும்!
!

6 comments:

  1. ஐயா அம்பலமாகி பயன் என்ன ?

    மக்களுக்கு எதையும் புரிந்து உணரும் பக்குவம் இன்னும் இல்லை
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. பணம் பாய்ந்துகொண்டுதானிருக்கும், நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  3. அம்பலமாகி என்ன பயன் என்பதுதான் என் கேள்வியும். இவர்கள் இப்படி சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்திருந்தால் இப்படி நேர்ந்திருக்குமா? ஊருக்கும் வெட்கமில்லை. இந்த உலகுக்கும் வெட்கமில்லை. யாருக்கும் வெட்கமில்லை.

    ReplyDelete
  4. பணம் பாதாளம்வரைப்பாயும் எனும்போது இதெல்லாம் ஜுஜுபியாகப் போய்விடும்

    ReplyDelete
  5. இந்தப் பணமெல்லாம் எங்குதான்
    இருக்கிறது.மூல வேரைப் பிடுங்காமல்
    இலைகளைப்பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  6. அம்பலம் ஆகி என்ன பயன். பெரிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை. இன்னும் காசு விளையாடும்! அவர்களிடம் பணத்திற்குப் பஞ்சமா என்ன!

    ReplyDelete