Tuesday, July 18, 2017

ஆடிப் பட்டம் தேடி விதை –என்று ஆன்றோர் சொன்னது பழைய கதை!






ஆடிப் பட்டம் தேடி விதை –என்று
ஆன்றோர் சொன்னது பழைய கதை
                   இன்று
வாடிய முகத்தொடு வற்றிட வயலும் -கண்டே
வருந்திடும் உழவன் நெஞ்சில் புயலும்
ஓடிட வாழ வழிதனைக் காண!-அவனது
உள்ளமோ பல்வகை எண்ணங்கள் பூண
தேடியே போனான்! தெளிவுடன்! முடிவாக-உழவுத்
தொழிலையே மறந்தான் !வேற்றூர் !விடிவாக


புலவர் சா இராமாநுசம்

4 comments:

  1. வேதனை வரிகள் ஐயா

    ReplyDelete
  2. வேதனையான உண்மை வரிகள் ஐயா...

    ReplyDelete
  3. ஆடி வருகிறது. உழவர்களுக்கு நன்மைகள் நாடி வருவதில்லை!

    ReplyDelete
  4. வேதனைதான் ஐயா! இப்போது மழையும் பொய்த்துவிட்டதே! தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுதே...

    ReplyDelete