புலவர் கல்லுரி விடுதியில் தங்கிய
போது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....!
பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்
பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்!
நோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்
நோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்!
வாயெடுத்து சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்
வாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்றே!
தாயெடுத்து அணைக்காதக் குழந்தை போல-ஐயா
தவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சால!
நித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ
நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே!
சித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக
செப்பினால் நாங்களும் அதனைக் கண்டே!
தத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்
தகராறு வேண்டாமே! வயிறும் மூட!
இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து
இரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்!
மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
கடித்தயிடம் தெரியாமல் துளியும் இரத்தம்-அடடா!
கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்!
அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!
புலவர் சா இராமாநுசம்
மூட்டையார் ரொம்ப படுத்துறாரோ!
ReplyDeleteமூட்டையாரைப்பற்றிய கவிதை விண்ணப்பம் அருமை ஐயா
ReplyDeleteபடிப்பைக் கூட கெடுக்கும் அளவுக்கு மூட்டையார் படுத்துறாரோ:)
ReplyDeleteஅன்று மூட்டையார் இன்று கொசுவார்,
ReplyDeleteஎன்றும் தொல்லை தான் ஐயா...
ReplyDeleteஹிந்தியில் மூட்டைப்பூச்சிக்கு ஒரு பாடல் உண்டு... அது நினைவுக்கு வருகிறது!
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteதம+1
மூட்டைப்பூச்சி பற்றிய கவிதை அருமை ஐயா !
ReplyDelete