Monday, July 10, 2017

பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா பழியும் வருமே வாய்திறவாய்




தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில் 
தொல்லையா இன்பம் தந்ததுவே 
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக் 
கண்முன் காணா ஏக்கந்தான் 
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள் 
விட்டுச் சென்றதை நினவுதர 
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக 
அழகில் காண்பது மிகநாணே 

என்னுள் அவளே இருந்தாலும்-நல் 
இருவிழி தந்திடும் மருந்தாலும் 
பொன்னுள் பதித்த மணிபோல-தினம் 
புலம்பும் நெஞ்சின் பிணிமாள 
மன்னும் உயிரும் உடலோடு-அவள் 
மறுத்தால வாழ்வே சுடுகாடே 
 
எத்தனை காலம் ஆனாலும்-என் 
இளமை அழிந்து போனாலும் 
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம் 
செப்பிடும் வரையில் தூங்காது 
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான் 
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் 
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா 
பழியும் வருமே வாய்திறவாய் 

 


புலவர் சா இராமாநுசம்


19 comments :

  1. ​உணர்வோடு ஒன்றியவரானவர்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. பத்தரை மாற்று பெண்ணைக் காணோமே....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. "என்னுள் அவளே இருந்தாலும்-நல்
    இருவிழி தந்திடும் மருந்தாலும்
    பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
    புலம்பும் நெஞ்சின் பிணிமாள
    மன்னும் உயிரும் உடலோடு-அவள்
    மறுத்தால வாழ்வே சுடுகாடே" என
    உணர்வு கொப்பளிக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. இக்கவி எம் மனதையும் உலுக்கியது ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. அகக்கண்முன்னே தெரியாவிட்டாலும் அகக்கண்ணில் தெரிஞ்சிருப்பாங்களே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. இதுவும் கடந்து போகும் என்று சொல்ல முடியாத அளவுக்கு தாங்க முடியாத இழப்புதான் அய்யா இது :(

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  7. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  8. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  9. மகிழ்ச்சியூட்டும் கவிதை.பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...