Sunday, July 2, 2017

திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய தேவைக்குச் செலவும் செய்வீரே!



காலம் ஓடும் நிற்காதே-வீண்
  காலம் கடத்தல் ஆகாதே!
ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்
   நடப்பது இயற்கைப் பேராலே
ஆலம் கூட மருந்தாகும்-தூய
  அன்பே ஏழைக்கு விருந்தாகும்
கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
   கொள்கை அழகு! பேசலுக்கு

திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
   தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
   பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
    கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
   எண்ணா செயல்தரும் துயரன்றோ

மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
   மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
   சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நம்
   குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
   சிந்தனை தன்னில் ஆழ்வோமே

வையம் தன்னில் வாழ்வாங்கு-நாம்
   வாழ என்றும் புகழோங்கும்
செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
    சீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
   உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
   பூமியில் புகழச் சொல்லேது!

   மீள்  பதிவு               புலவர் சா இராமாநுசம்

13 comments:

  1. நல்ல அறிவுரைகள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. மிக்க மகிழ்ச்சி அய்யா தங்களின் உடல் நலம் தேறக் கண்டு :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!வாழ்துக்கும் நன்றி

      Delete
  3. //ஆலம் கூட மருந்தாகும்-தூய
    அன்பே ஏழைக்கு விருந்தாகும்//

    அருமையான வரிகளுடன் அழகான ஆக்கம். ஒவ்வொன்றும் அருமையான அறிவுரைகள். பாராட்டுகள். மீள் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை யும் பாராட்டும் நான் நலன் பெற மாமருந்து !நாளும் உங்கள் வருகை மேலும் என்னை
      வாழ வைஃகும்

      Delete
  4. மீள் வருகை கண்டு மகிழ்ச்சி ஐயா

    ReplyDelete
  5. மிக்க நன்றி கில்லர்!

    ReplyDelete
  6. நல்ல அறிவுரைகள்

    ReplyDelete
  7. // உண்மை, உழைப்பு எருவாகும்... //

    ஆகா...! அருமை ஐயா...

    ReplyDelete
  8. தாங்கள் உடல் நலம் பெற்று கணினி முன் அமர்ந்தமை கண்டு மகிழ்கின்றேன் ஐயா
    தம+1

    ReplyDelete
  9. தாங்கள் கூறுவதில் சிலவற்றைக் கடைபிடிக்கிறேன் ஐயா.

    ReplyDelete