Wednesday, June 7, 2017

வாழ்க வாழ்க தமிழ்மணமே- பதிவுகள் வளர்ந்திட இன்று அனுதினமே!



வாழ்க வாழ்க தமிழ்மணமே- பதிவுகள்
வளர்ந்திட இன்று அனுதினமே
சூழ்க சூழ்க பொலிவுடனே –வானின்
சுடரென என்றும் வலுவுடனே
வருவது கண்டே மகிழ்கின்றோம்-மதிப்பெண்
வழங்கலும் எளிதென புகழ்கின்றோம்
கருவென இருந்தவர் பலரின்றே-பூத்து
காய்த்திடச் செய்தாய் நனிநன்றே!


புலவர் சா இராமாநுசம்ஃ

16 comments:

  1. இணைந்து வாழ்த்துவோம்; மனமார வாழ்த்துவோம்.

    ReplyDelete
  2. உண்மைதான் ஐயா தமிழ்மணம் பலரது மனங்களை சந்தோஷப்படுத்துகிறது.
    த.ம. 2

    ReplyDelete
  3. வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  4. ஆம், சரியாக இல்லாதபோது குறை சொல்லும் நாம், சரியாக இருக்கும்போது பாராட்டவும் வேண்டுமே...

    ReplyDelete
  5. இன்று என் பஹிவுகள் திறக்க மாட்டேன் என்கிறது வெயிட்டிங் ஃபர் தமிழ் மணம் என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது தமிழ்மணம் ஒரு புதிர் மணம்

    ReplyDelete
  6. உண்மைதான் ஐயா தமிழ் மணம் வாக்கு உடனே விழுகிறது
    வாழ்த்துவோம் போற்றுவோம்

    ReplyDelete
  7. மகிழ்ச்சி நிறைய பதிவுகள் வாக்கு விர்ரெனே விழுவது என சந்தோஷமா இருக்கு

    ReplyDelete
  8. தமிழ் மணம் கமழத் தொடங்கி விட்டதில் மகிழ்ச்சி :)

    ReplyDelete
  9. மீண்டும் தமிழ் மணம்
    மணம் கொண்டது மகிழ்வளிக்கிறது
    உங்கள் வாழ்த்து அதற்கு உரமாய்...
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  10. புதிய தளங்களை இணைத்தால் மீண்டும் மகிழ்வேன்...

    ReplyDelete
  11. நல்ல விஷயம். வேக வேகமாக வாக்கு விழுந்தால் மகிழ்ச்சி தான். தொடரட்டும் இந்த வேகம்.

    ReplyDelete
  12. ஏனோ இப்போது தமிழ்மணம் தேக்க நிலையில் என் டைமன் மாற்றிய பின் அவர்களிடம் தெரிவித்தும் இன்னும் காத்திருக்க வைக்கின்றது. ஆரம்பத்தில் அதன் சேவையை மறக்கவில்லை.

    ReplyDelete
  13. தங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன் ஐயா!

    ReplyDelete
  14. வணக்கம் புலவர் ஐயா !


    விண்டுமோர் துளியை மண்ணில்
    ...விதைத்ததும் பூக்கள் நாற
    வண்டுமோர் நிமிடத் துள்ளே
    ...வந்திடல் போலத் தாங்கள்
    கொண்டதோர் மகிழ்வில் இங்கே
    ...கொடுத்திடும் அமிழ்தின் முல்லை
    கண்டதோர் கட்சி சொக்கக்
    ...கவிதையாய்ப் போலியு தையா !

    அழகான கவிதைக்கு அன்பு நன்றிகள் இன்னும் தாருங்கள்
    எதிர்பார்த்து இருக்கிறோம்

    வாழ்க நலம் வாழ்க நூறாண்டு


    ReplyDelete