கதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும்
கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு
முதியவனாம் படுகின்றேன் அந்தோ தொல்லை-நாள்
முழுவதுமே வாட்டுவதால் தூங்கல் இல்லை
கதியிலவே கரம்குவித்து வணங்கு கின்றேன்-ஏற்று
கைதூக்கி விடுவாயா போற்று கின்றேன்
விதியென்று ஒதிங்கிநீ போக வேண்டாம்- படும்
வேதனைக்கி மாற்றுவழி செய்வாய் ஈண்டாம்
புலவர் சா இராமாநுசம்
சூழ்நிலைக் கவிதை அருமை ஐயா
ReplyDeleteகதிரவன் ஏற்பான் என்றே நம்புவோம்.
வணக்கம்
ReplyDeleteஐயா
கவிதை சிறப்பு இறைவன் கருணை கிடைக்கட்டும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆமாம்ப்பா. முடில... கத்திரி வேற
ReplyDeleteகதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு....
ReplyDeleteஅனைவருடைய வேண்டுகோளும் அதுவாகத்தான் இருக்கிறது! கோடை கொடுமையாகத் தான் இருக்கிறது!
உங்கள் குரல் காதில் கேட்டதோ என்னவோ. தமிழ் நாட்டில் பல இடங்களில் மழை.
ReplyDelete